கிழக்கு ஊடாக மன்றம் - வாழைச்சேனை ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) காலை 11.11 மணிக்கு சுபவேளையில் புதுவருடத்தினை முன்னிட்டு வாழைச்சேனையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.சிரேஷ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி...
இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு" அங்குரார்ப்பண வைபகமும்...
கல்வி அமைச்சினால் அநுராதபுரத்தில் நடாத்தப்பட்ட அகில இலங்கை தேசிய மட்ட அழகியல் நடனபோட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயத்திலிருந்து பங்குபற்றிய ஐந்து போட்டிகளிலிலும் முதலிடத்தைப்பெற்றுள்ளது. அந்த வகையில் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை ஒயிலாட்டம், உழவர்நடனம், செம்பு நடனம், ஆகிய போட்டிகளில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதுபோல் பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம், காவடியாட்டம், செம்பு நடனம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியில்முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று பாடசாலைகளுக்கும், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள, களுதாவளை மகாவித்தியாலயம் தேசியபாடசாலை மற்றும் பெரியபோரதீவு பாரதிவித்தியாலயம், ஆகிய மாணவர்களுக்கும் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் மற்றும்பெற்றோர்ளுக்கும், கல்விச் சமூகம், மற்றும் பழைய மாணவர்கள், உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துதுள்ளனர்.
"சமயங்கள் நமக்காக - நாம் சமூகத்திற்காக" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு எகெட் கரீத்தாஸ் நிறுவனத்தின் மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல் சமயங்கள் சங்கமிக்கும் கலாசார நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக...
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் நேற்று (24) நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித...
இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த, வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் அதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு...
ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் சுற்றாடல் படையணியினருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியர் ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை முதல்வர் அல்ஹாஜ்...
யானைகளது நடமாட்டம் அதிகரித்து வரும் கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன்...
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்தநாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியதுதான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மூச்சுசெயற்றிட்டத்தின் கீழ் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு போதனாவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
39 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி இப்பிரதேசத்தில் வாழக்கின்ற மக்களின் இன்னல்களின் ஒருபகுதியை நிவர்த்தி செய்வதற்கு எனக்கு கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
சுவாசம் எனும் எமது திட்டத்தினுடாக வழங்கப்படும் எமது இச்செயற்றிட்டத்தின் 55 வது வைத்தியசாலையாகும், இதுவரையில் நாம்1680 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். இதனை ஒரு சாதாரண வேலைத்திட்டமாக கருதமுடியாது. இது உயிர்காக்கும் வேலைத்திட்டமாகும். அதுபோல் இதுவரையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு, 2292 இலட்சம் ரூபா பெறுமதியான 48 பாடசலைகளுக்கு தலா ஒவ்வொரு பேரூந்துகளை வழங்கியுள்ளோம். பிரபஞ்சம் எனும்வேலைத்திட்டத்தின் கீழ் 178 இலட்சம் ரூபா பெறுமதியான கணிணிகளையும் பாசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறுவேறுபட்ட சிந்தனையில் நாம் வேலைசெய்து கொண்டிருக்கின்றோம்.
74 வருட அரசியல் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு இந்நாட்டில் வேலை செய்திருக்கவில்லை.
மட்டக்களப்பில் 3 தேர்தல் தொகுதிகள், 616 வாக்குச்சாவடிக்கள், 14 பிரதேச செயலாளர் பிரிவுகள், 345 கிராம சேவைஉத்தியோகஸ்த்தர் பிரிவுகள், 1240 குக்கிராமங்கள், லட்சக்கணக்கான மக்கள், இம்மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் நான் உறுத்தியெடுத்துக் கொள்கின்றேன் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்து வைப்பதற்கு எதிர்காலத்தில் பொறுப்பெடுப்போம்.
இவ்வைத்தியசாலைக்கு மெத்தைகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை ஒன்றை என்னிடம்முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் அதனையும், வைத்தியசாலைக்குத் தேவையான ஏனைய மருத்துவ இயந்திரங்களையும் நாம் வழங்குவோம்.
கடந்த காலத்திலிருந்து வந்த அரசாங்கங்களும், எதிர்க்கட்சியினரும், மாறி மாறி கேம் ஆடிக்கொண்டிருப்பார்கள் மக்களின்வரிப்பணத்தைக் கொண்டு மக்களுக்கு மானியம் வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். மாறாக எவ்வாறாயினும்ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற எண்ணத்துடன் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். “அவனுகளும் ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்” என மக்கள் கூறுவார்கள்.
கடந்த சுனாமிக்குப் பின்னர் கோடிக்கணக்கானபணம் இலங்கைக்கு வந்திருந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு ஜனாதிபதியாக்கியவர்கள்தான் “அவனுகளும்ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்” எனக் கூறுபவர்கள். இவர்கள் மத்தியிலே நாங்கள் வித்தியாசமானவர்கள். நாட்டின்தலையெழுத்தை மாற்றும் நோக்குடன் எதிர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மிகவும் திறம்பட மக்களுக்குச் சேவை செய்துகொண்டிருக்கின்றோம். அதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
நாம் இவ்வாறு அபிவிருத்திகளைச் செய்யும்போது சிலர் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றயநிலைமை. எனவே கல்வியிலும், சுகாதாரத்திலும் வீழ்ந்துகிடக்கின்ற நாட்டைக் கட்டியயெழுப்ப வேண்டும். வெளிநாடுகளுக்கு நிகரான ஒரு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாணவர்கள் முன்னேற வேண்டும். இதனை சிலர் ஏழனம் செய்கின்றார்கள். அதற்காகநாம் கவலைப்படப் போவதில்லை.
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்தநாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே நாம் கல்வியிலும், சுகாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்களின் அனைத்துவிடையங்களையும் நாம் எதிர்காலத்தில் கையிலெடுப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம் இடத்தை பெற்றுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன்...