Friday, May 3, 2024

பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் – ஏ.எல்.கபீர்

Must read

தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும் என கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் சர்வதேச தொழிலாளர் தினம்  தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை(30) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்

சர்வதேச தொழிலாளர் தினத்தை தற்போது உலகம் பூராகவும் அனுஸ்டிக்கின்ற நிலையில் எமது நாட்டின் உள்ள நிலைமையினால் அத்தினத்தை மிக விமர்சையாக கொண்டாட முடியாததனால் நாம் கவலை அடைகின்றோம்.அந்த வகையில் எமது நாட்டின் பொருளாதார  சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஊழியர் தினத்தை அனுஸ்டிக்கின்ற துப்பாரக்கிய நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையை பார்க்கின்ற போது மிக வேதனையாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நாட்டில் உள்ள ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.தற்போதைய வாழ்க்கை செலவு ஊழியர்கள் மத்தியில் சிரமங்களை கொடுக்கின்றது.கல்முனை பொதுச்சந்தையானது குறைந்த ஊழியர்களை கொண்டு சிறப்பாக இயங்கிய ஒரு சந்தையாகும். இந்த தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும்.
 இந்த நாட்டின் ஊழியர்களின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள சகல பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய  இணைந்து தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என கல்முனை பொதுச்சந்தையில் இருந்து மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.எமது சகோதர்கள் போன்று அவ்வூழியர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.இந்த ஒற்றுமையான நிலைமையினை கல்முனை பொதுச்சந்தையில் மட்டுமல்லாது நாடு பூராகவும் இவ்வாறான ஒற்றுமை நிலவ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.எனவே தான் அனைத்து ஊழியர்களும் நிம்மதியாக வாழ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article