Sunday, May 5, 2024

கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில்

Must read


கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புனர்வு செயலமர்வு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு பாடசாலைகள் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக  வந்தாறுமூலை தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையிலும்  நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற செயலமர்வின் இறுதி நாளாகிய இன்று ஊடகச் சட்டங்கள்,குற்றங்களும் தண்டணைகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவுற்றது.அதிதிகளாக தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் வி.கனகசுந்தரம் மற்றும் டுகைவ மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் நிகழ்சி திட்ட இணைப்பாளர் வி.கண்ணன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
வளவாளர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன் மற்றும் எம்.ருக்ஷி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை இன்றைய செயலமர்வு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை,மாக்கான் மார்க்கார் தேசிய பாடசாலையிலும் நடைபெற்றது.
ர்நடஎநவயள   நிறுவனத்தின் நிதி அனுசரனையில் டுகைவ   எனும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு மனித நேயத் தகவல் குறிப்புகள் (மதகு) நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டு வருகிறது.


க.ருத்திரன

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article