Wednesday, January 22, 2025

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்

Must read

IMG_4314   யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது.

திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக கிட்டங்கி,சேனைக்குடியிருப்பு,  நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார் 15 க்கும் அதிகளவான யானைககள் வருகை தந்துள்ளன.

புதன்கிழமை(28) னாலை  குறித்த  யானைகள் குட்டிகள் உள்ளடங்களாக அறுவடை நிறைவடைந்துள்ள வயல்காணிகளை நோக்கி  மீண்டும்  வந்துள்ளது.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வருகை தந்த வண்ணம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கடந்த  காலங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக மின்சார வேலிகளை அமைப்பதாக பல தரப்பினரும் வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் முறையாக அமுல்படுத்தவில்லை .IMG_4316 IMG_4319 IMG_4311

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article