Saturday, April 27, 2024

கல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு

Must read

D-(75)
கல்முனை  பொலிசாரின் ஏற்பாட்டில் கல்முனை     சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு ‘மீட்டரான வாழ்க்கை’எனும் தொனிப்பொருளில்  கல்முனை   பேருந்து நிலையத்தில் COVID 19 விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு இன்று (29)முன்னெடுக்கப்படுகிறது

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் அம்பாறை  பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன  மற்றும் கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர ,கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன், தொற்று நோய் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் ,  பொலீசார் கலந்துகொண்டு கல்முனை  நகரில் சேவையில் ஈடுபடும் அரச தனியார்  பேருந்துகளிற்கு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஸ்ரிக்கர்கள்   ஒட்டப்பட்டது

D-(38) D-(50)(1)
அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டதோடு சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article