Wednesday, January 22, 2025

அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இணைந்து போராட வாருங்கள் – மைத்திரி

Must read

President Batti Eravurஅரசாங்கம் தொடர்ந்து போக முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத்தொழிற்சாலையை இன்று வெள்ளிக்கிழமை (01) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

இந்தப் பிரதேசம் எனக்கு புதியதல்ல. உங்களுடைய அடுத்த மாவட்டத்தில் தான் இருக்கிறேன். நான் பிறந்து வாழ்ந்தது அடுத்த மாவட்டத்திலே தான். நான் இந்த பகுதிக்கு 25- 30 வருடங்களாக வருகின்றேன். அதற்கு முன்னர் பாடசாலைக்கு செல்லும் போது வந்தேன். பொலநறுவையில் கல்வி கற்கும் போது நண்பர்களுடன் இணைந்து துவிச்சக்கர வண்டியில் குளிப்பதற்காக வந்தேன்.

30 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த அனுபமான பிரதேசம் இது. கடந்த ஜனவரி 8ம் திகதி எனக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கினீர்கள். எனவே இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை உருவாக்க வழங்கிய ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி.

எனக்காக வாக்களித்த மக்கள் எனக்கு ஒரு வேண்கோள் விடுத்தார்கள். என்னிடம் உணவு, உடை , பணம் வேண்டுமென்று சொல்லவில்லை. பாரிய ஒன்றை சொன்னார்கள். எனக்கு உணவு உடை இருந்தாலும் கூட சுதந்தரமாக வாழக்கூடிய சூழலையே உருவாக்கச் சொன்னார்கள்.

அன்று சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயந்துடன் வாழ்ந்தார்கள். சுதந்திரமாக வாழவில்லை. சுதந்திரமாக தொலைபேசியில் கூட பேசவில்லை. தொலைபேசியில் பேசும் போது கூட இரகசியமாகவே பேசினார்கள் . ரப் செய்யப்படுகிறதா என்று பயந்தார்கள்.

இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக பேசக்கூடிய நிலை இல்லை. யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது. யுத்தம் முடிந்த பின்னரும் சந்தோசமின்றியிருக்கிறோம். இப்போதும் நாங்கள் அந்த சமாதானத்தை உருவாக்கியிருக்கிறோம். அதற்காக கஸ்ரப்பட்டவர்கள் மக்கள் தான்.

எங்களுடைய முப்படைகளும் பாதுகாப்பு வழங்க, மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் அந்த சமாதானத்தை நீண்டகாலம் பற்றி வைத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு துப்பாக்கியினால் நீண்ட சமாதானத்தை உருவாக்க முடியாது. நாட்டு மக்கள் மனதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. யுத்தம் ஏன் ஏற்பட்டது என பார்த்தோமா?.

பாதுகாப்பு படையைச் சேர்நதவர்களை, சிங்கள தமிழ் மக்கள் உயிரை இழந்தார்கள். எந்த மதம் என்று இல்லாமல் இறந்து மடிந்தார்கள். எனவே இந்த மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டார்கள். எனவே மீண்டும் யுத்தம் எற்படாத வகையில் பிரச்சனையை தீர்த்து வைக்கவே வேண்டும். எனவே அனைவருக்கும் இது சம்பந்தமாக பாரிய பொறுப்பு உள்ளது.

நீங்கள் இருக்கும் இந்த கிழக்கு மாகாணத்திலேதான் சூரியன் உதிக்கின்றது இதனால்தான் இதற்கு கிழக்கு என்று பெயர். அதேபோன்று நாட்டின் தலைநகரம் மேல்மாகாணம். சூரியன் மறைவது அங்குதான்.

இந்த நாட்டிலே கிழக்கு மகாணத்திற்கும் மேற்கு மாகாணத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்தை காண்பது சூரியன் பகவான் மாத்திரம் தான். அதைப் பற்றி அவர் தான் நன்றாக எடுத்து கூறுவார்.

கிழக்கு மகாத்திற்கும் மேற்கு மகாhண அபிவிருத்தி சமமாக உள்ளதா? மேற்கு கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார நிலைமை சமமாக உள்ளதா? நாங்கள் கிழக்கு மகாhணத் மேற்கு மாகாணத்திற்கு உரிய பிரச்சனையை பார்த்தால் வித்தியாகம் உள்ளதா? கல்வி வசதிகள் சமமாக உள்ளதா? மக்களுக்கு சுகாதார சேவை ஒரே மாதியாக வழங்கப்படுகின்றனவா? பொதுப் போக்குவரத்து வசதி சமமாக உள்ளதா அப்படியானால் இந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்று நாம் புரிந்து கௌ;ள வேணடும்.

எனவே வித்தியாசம் கால நிலை மாத்திரம் தான். எனவே இது காலநிலை பற்றிய பிரச்சனை அல்ல. ஐக்கிய அரபு இராச்சியம் மோசமான வெப்பமாக நாடு. அந்தப் பகுதியை பாலைவனம் என்று சொல்லுகிறோம். அந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளது.

எனவே இந்த வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு வேறுபாடு இல்லை. எல்லாம் ஒரேமாதிரயாக அபிவிருத்திடையவேண்டும். எல்லாம் சமமாக வழங்க வேண்டும். இந்தவித வேறுபாடு இன்றி சந்தேசமாக வாழ்வதற்குத்தான் எங்களது அரசை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மீண்டும் துப்பாக்கி ஏந்த இடமளிக்க கூடாது. இந்த நிலைமை வர அபிவிருத்தி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஐந்து பேரும் ஒரே மாதிர வாழ வேண்டும்.

எனவே வாழக்கூடிய மக்கள் எல்லோரும் சந்தோசமாக வாழக்கூடியதான நாட்டை உருவாக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டமானால் தமிழ் முஸ்லிம் மக்களது பிரச்சனைகள் திர்க்கப்பட வேண்டும். அனைவரும் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

அதை நாங்கள் இவ்வாறு செயற்படும் போது சிலர் நாட்டைப் பிரிக்க போகின்றோம் என்று, நாட்டை காட்டிக் கொடுக்கின்றோம் என்று, சர்வ தேசத்திற்கு அடிபணியப் பேகின்றோம் என்று சொல்லுகின்றனர். நாட்டைப் பற்றி வேதனை எங்களுக்கு இருக்கின்றது.

இந்த பிரச்சனைகளை பார்த்து பேசுவதற்கு முயற்சிப்பவர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். எமது கடமை அபிவிருத்தி செய்தலும், சமாதானத்தை ஏற்படுத்துவதும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகோதரத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுகின்றோம் அனைவரும் சமாதானத்துடன் வாழ்வோம். அவ்வாறு பிரிக்க போனால் கண்ணீர் வர நேரிடும்.

பௌத்த தத்துவம் தன்னை பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. எல்லோருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் பௌத்த தத்துவம் சொல்கின்றது. எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக செயற்பட முடியும். ஆனால் அரசாங்கம் தொடர்ந்து போக முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன்.

2030ம் ஆண்டு கிழக்கு மாகாணம் எவ்வாறு இருக்கவேண்டும் என தொலைநோக்கை அறிமுகப்படுத்தினால். இதேபோன்று இலங்கை ஒரு இலக்கை அடைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இங்கு வேலை செய்யும் பெண்களை பார்த்தால் சந்தோசமாகவுள்ளது. அவர்கள. மத்தியில் இனமத பேதமின்றி செயற்படுகின்றார்கள். அங்கிருக்கும் இயத்திரம் தமிழ் என்றோ முஸ்லிம் என்றோ சொல்லாது. இது நாட்டு மக்களுக்குத் தெரியாது.

குpழக்கு மாகாண சபை நல்லிணக்கத்துக்கு சான்றாகத் திகழ்கிறது. அந்த அமைப்பை சக்தி மயப்படுத்த வேண்டும். எல்லா கம்பனிகளையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக வேலை செய்கின்றார்.

அரசு என்ற வகையில் ஆதரவு வழங்குவோம். ஒன்பது மாகாணமும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த, உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இந்த நாட்டில் எல்லாத்துறையினரும் சேவையாற்ற வேண்டும்.

நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய வேண்டும். பொதுவான இலக்கு இருக்கின்றது. நாளைய நாளை நல்ல நாளாக மாற்றுவோம். உலகத்திலுள்ள நாடுகளள் எவ்வாறு முன்னேறியுள்ளதோ அவ்வாறு நாட்டை முன்னேற்றுவோம். நாளை பிறக்கும் பிள்ளைகளுக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது நமது கடமை”என்றார்

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article