உலகில் சுத்தமான நீரின் அளவு தீர்ந்து கொண்டு வருகின்றதென்பதைச் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான காரணிகள் உள்ளன. மனிதன் இந்த ஜீவன வளத்தை மிக விரைவில் நாசம் செய்வது கவலைக்குரியதாகும். ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு தினமும், சுத்தமான நீருக்காக நிலவும் கேள்வி பாவனையில் உள்ள நீர் விநியோகத்தையும் மிஞ்சியதாக உளளது.
உலகின் பரிமாணத்தில் 70% க்கு மேலான அளவை மூடியுள்ளது நீரேயாகும். அதில் 97% கடலிலேயே தங்கியுள்ளது. கிளேஸியர் மற்றும் தேங்கியிருக்கும் நீரின் அளவு நீங்கலாக 0.003 வீதத்துக்குக் குறைவான அளவு மக்களின் பாவனைக்காக பேணப்பட்டாலும் இன்று அதுவும் குறைந்து கோண்டே இருக்கின்றது. அதுவுமின்றி உயிரினங்களின் நிறையின் 50% – 90% வரை நிரம்பி இருப்பது நீரினாலாகும். நீர் எனப்படும் இந்த வளம் புவியில் வாழும் உயிரினங்களான மனிதன் முதலான உயிரினங்களை போஷிப்பதோடு சந்தர்ப்பத்திற்குச் சந்தர்ப்பம், வேளைக்கு வேளை எதிர்பாராத பெருக்கெடுப்பின் மூலமான அழிவும் ஏற்படுவது நீரின் கட்டாய இயற்கைத் தன்மையிலாகும்.
அதற்கு மாற்றீடும் இல்லை. எனினும், நெருப்பைப் போன்றே நீருடனும் விளையாட முடியாது. அதற்கான காலம் இதுவல்ல, வரலாறு எமக்குப் புகட்டும் பாடத்தை நாம் நினைவு கூர வேண்டும். தாமதமின்றியாவது நீர்ப்பாவனை பற்றிய தேவைகள் மற்றும் அதன் முன்னருமைகளைச் சரியாக இனம் கண்டு மற்றும் வகைப்படுத்திக் கொள்ளாத பட்சத்தில் குறைந்த பட்சம் குடிக்கும் நீராவது இல்லாது பற்பல கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.
உலகில் வாழும் மக்கள் தொகையின் கால் பங்கினர் சுத்தமான குடிநீர் பற்றிய பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எமது நடவடிக்கைகளும் கவனக் குறைவுமாகும் என்பது தெளிவு.
மக்களின் செயல்பாட்டின் மூலம் சுத்தமான நீர் அசுத்தமடைவது காரணமாக மக்களுக்குத் தேவையான சுத்தமான நீர் பற்றாக்குறைக்கு உள்ளாகிறது.
தொழிற்துறைகள் பெருகுதல், மக்கள் பரம்பல், நகரமயமாதல் காரணத்தினால் இந்த நிலைமை விரிவடைந்துள்ளதென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தொழில்மயமாதல் காரணமாக தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுவது, பெருகி வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்கள் நகரமயமாதலில் ஈடுபடுவது நகர மற்றும் கிராமிய குடிசைவாழ் மக்கள் தொகை பெருகுவது சேரிவாசிகள் நதிகள், நீர் நிலைகளானவற்றை அண்மித்து நிலை பெறுவது மூலம் கஞ்சல், குப்பை முதலிய அசுத்தமான பொருட்களினால் சுற்றாடலைப் போன்று நீர் அடிப்படைகளை அசுத்தப்படுத்துவது போன்றவை நிகழ்கின்றன.
உதாரணமாக களனி ஆற்றின் இறுதிப் பகுதியில் தொழிற்சாலைகளைப் போன்று குடியிருப்பாளர்களாலும் பல வகையான கழிவுப் பொருட்கள் இடப்படுவதனால் ஏற்பட்டிருக்கும் நிலைமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். கொழும்பு நகரத்தில் மாத்திரம் 2000 ஆம் ஆண்டில் தினமும் 9000 தொன்னுக்கு மேற்பட்ட குப்பை கூளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றாடலைப் போன்று நீரின் தூய்மையற்ற தன்மையும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று உலக சனத்தொகையில் கூடிய எண்ணிக்கையானோர் அதாவது 40% க்கும் கூடிய தொகையினர் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பின்றி இருக்கின்றனர். உலக சனத்தொகையில் கோடிக்கணக்கானோர் நீர் தொடர்பான நோய்களினால் பீடையுற்று உள்ளனர். துயருறுகின்றார்கள் .நீர் பற்றாக்குறையின் எதிர்த்தாக்கத்தினால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டாகும் போது பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத அல்லது அது சம்பந்தமான பாரிய பிரச்சினையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படலாம்.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு பிரதி வருடமும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு உலக நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தொனிப்பொருள் ‘நீர் மற்றும் பணிகளும்’என்பதாகும்.
கொழும்பில் நடைபெறும் இன்றைய விழாவில் பேராசிரியர் சரத் விஜேசூரிய நீர் தினம் பற்றி விசேட சொற்பொழிவாற்றுவார்.
ஆய்வு நடவடிக்கைகள் பற்றிய கருத்தரங்கு, சிறுநீரக நோய் பற்றிய கருத்தரங்கு, நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவை, நுகர்வோர் உரிமைகளுக்கான ஒழுங்கமைப்பு வேலைத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, சுவரொட்டி, பேச்சு மற்றும் சிறு நாடகம் போட்டிகள், நீர் வழங்கல் சபையின் பல்வேறு பிரிவுகள் மூலம் விசேடமாகச் செயற்படும் அலுவலகங்களை கௌரவித்தல், கடந்த வருடத்தில் 150 (ஐ. எஸ். ஓ.) சான்றிதழ் மற்றும் சாதனை நிலை சான்றிதழ் பெற்ற அலுவலகங்களை கௌரவித்தல், நீர் வழங்கல் சபையில் நீண்ட கால சேவைக்கான ஊழியர்கள் கௌரவிப்பு போன்றன நீர் தின விழாவில் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 19 ஆம் திகதி நடைபவனியும் இடம்பெற்றது.
இன்றைய விழாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்ணாந்துபுள்ளே மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள் பலரும் பங்குபற்றுவர்.
- Thanks Thinakaran lk-