ருத்ரா அனுமதியின்றி ஓவியா விடுதி வளாகத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கக்கோரி இன்று மாலை (16) திருமலை வீதி கிரானில் பொது அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு கிரான் கிறிஸ்த்தவ சேவை ஆச்சிரம...
பரீட்சை மோசடியில் ஈடுபட்டு கத்தோலிக்க மக்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திய நீர்கொழும்பு சாந்த மரியாள் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஜயந்த விக்ரமசிங்க பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்று வந்தவராவார்.
பரீட்சை மோசடி...
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் 25.01.2022 அன்று மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை...
இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...
.
சுகிர்தராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.
2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு திங்கட்கிழமை(24) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நடைபெற்ற துடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட மும் இடம்பெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,
மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன். இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமகே, மற்று ஏனைய அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளர் புத்திரசிகாமணி, மற்றும், முன்னாள் ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரனும் இணைந்து மலர்மாலை அணிவித்தனர். பின்னர் 16 நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதன்போது கலந்து கொண்டோர், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
7தங்கப்பதக்கங்களுடனும் 5 சில்வர் பதக்கங்களுடனும் இலங்கையை வந்தடைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அணி
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும்...
மட்டக்களப்பு எல்லாக்கிராமமான ஊத்துச்சேனை காட்டில் தேன் எடுக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று காணாமல் போன முதியவர் ஒருவரை பிரதேச மக்கள் தேடுதலில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை...
சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வெளிக்கொணருபவர்கள் ஊடகவியலாளர்கள், ஆனால் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படாமலுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர்...
2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் 16வது நினைவஞ்சலி தினம் ஞாயிற்றுக்கிழமை (2)மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்ட...
லசந்தவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை...