Saturday, November 23, 2024

வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள்விழா

Must read

தரம் ஒன்று மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள் விழாவானது மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமாரின் வழிகாட்டல் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.தேவரஜனி உதயாகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை(30)காலை மாணவர்களுக்கு வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான க.ஹரிகரராஜ்,திருமதி.கரன்யா சுபாகரன்,ஆம்பக்கல்வி பிரிவுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி.உமாவதி விவேகானந்தம்,சேவைக்கால ஆங்கிலப்பாட ஆலோசகர் திருமதி.வி.மகேஸ்வரன்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராசதுரை -பாஸ்கர்,ஆரம்பபிரிவுத்தலைவர் எஸ்.சிற்சபேசன்,வலயக்கல்வி அலுவலகத்தின் துறைசார் உத்தியோகஸ்தர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான வாய்மொழி கற்பித்தல் நிகழ்வுகள் ஆடல்பாடலுடன்,செயற்பாட்டுத்திறனுடன் பொறுப்பான ஆசிரியையினால் மகிழ்ச்சிகரமான முறையில் கற்பித்தல்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கான மேற்படி  வேலைத்திட்டமானது வலயத்தில் உள்ள 61 பாடசாலைகளிலும் வைபரீதியாக இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது.இதேவேளை கிழக்கு மாகாணத்திற்கான கற்பித்தல் வேலைத்திட்டமானது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,உதவிச் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மற்றும் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்றையதினம் நடைபெற்று வருகின்றது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article