Friday, November 22, 2024

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Must read

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவது வழமை.இந்நிலையில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அப்பகுதியில் இடையூறு ஏற்பட்டு வந்தள்ளது.

இதனை நிறுத்துமாறு அருகில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் தெரிவித்துள்ளார்.இதனால் இங்கு கைலப்பு ஏற்பட்டு கத்தி வெட்டு தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருகில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.இம்மோதலினால் 3 பேர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீதிகளில் கிரிக்கட் விளையாட்டு இடம்பெறுவதுடன் வீதியில் செல்வோர் அதிகளவில் அசௌகரியங்களுக்குள் உள்ளாவதாக இச்சம்பவத்திற்கு விசாரணைக்காக ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article