Sunday, December 22, 2024

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

Must read

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்று புதன்கிழமை (29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 8 ஆம் திகதி  பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா இடம் பெற உள்ள நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை(29) மாலை பங்குத்தந்தை, அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் கிராம மக்கள் இணைந்து கொடியேற்றம் செய்தனர்.

அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 8 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.

தொடர்ந்து 25 ஆம் திகதி  இயேசு பிறப்பு விழா வும், ஜனவரி முதலாம் திகதி புதுவருடப்பிறப்பு திருவிழாவும்,.ஜனவரி 06 ஆம் திகதி மூவரசர் திருவிழா ( காணிக்கைப் திருவிழா ) கொண்டாடப்படும்.

இந்த நிலையில் நான்கு திரு விழாக்களை கொண்டாடும் வகையில் ஒரு கொடியை ஏற்றி ஒரு குடையின் கீழ் உள்ள மக்களாக  பேசாலை   சமூகம் கொண்டாடி மகிழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

S.R.Lambert

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article