Sunday, December 22, 2024

மட்டு நகரில் ஓவியக் கண்காட்சி

Must read

பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகி அவர்களின் ஓவியங்களின் கண்காட்சி இம்மாதம் 05 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர் இல 55 லேடிமனிங் டிறைவ் (கல்லடிப் பாலத்து இறக்கத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீதி) எனும் முகவரியிலுள்ள இல்லத்தில் மு.ப 09:00 மணி தொடக்கம் மாலை 05:00 மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.

ஒரு பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகக் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தான் எதிர்கொண்ட அனுபவங்களை ஓவியக் கலையாக்கங்களுடாக வெளிக்காட்டும் கலைத் தொகுப்பாக இக்காட்சியை வாசுகி நடாத்தவுள்ளார்.

இதனால் இக்கண்காட்சியானது ‘கடந்து வந்த காலத்தைப் பார்த்தல்’ (1989 – 2023) எனும் பெயரில் நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article