Wednesday, January 22, 2025

செந்நெல் கிராமம் வைத்தியசாலைக்கு காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

Must read

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது
குறித்த காணி உறுதிப்பத்திரத்தை கையேற்கும் நிகழ்வு 2023.03.29ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் ரிபாஸ், செந்நெல் கிராமம் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஏ.எப். அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article