Thursday, November 21, 2024

உணவகங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

Must read

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபாவின் தலைமையில் காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது. 

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுசுகாதார பரிசோதர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல்.எம்.சப்னூஸ் ஆகியோரால் பரிசோதிக்கப்பட்டது. 

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது உணவு சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் நம் மக்களதும், பாடசாலை மாணவர்களதும்
சுகாதாரத்தையும், உணவுச்சுகாதாரத்தையும் நடைமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவ்வாறான தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபா தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் இரவு நேர உணவு நிலைய திடீர் பரிசோதனைகளும் வாராந்தம் இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article