நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்றலில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இன்றைய தினம் புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், சேவைக்கால ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசுக்கெதிராகவும், வரி அறவீடுகளுக்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
முக்கியமான மாணவர்களிகன் போசாக்கு தொடர்பாகவும், பாடநூல் விநியோகம் தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
