Sunday, December 22, 2024

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Must read

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம்.அதாஉல்லா (பா.உ) தலைமையில் நேற்று  நடைபெற்றது. 
பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர்  மண்டபத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட மா நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுக்கள் எட்டப்பட்டன.
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளில் நிலவும்  பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துறைசார் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு அக் குழு விரைவில் கூடி பிரச்சினைகளை ஆராய்ந்து நிரந்தரமான தீர்வு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துதல் எனத்  தீர்மானிக்கப்பட்டது.
வெள்ள அனர்த்ங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிமுறைகள் இனங் காணப்படுவதுடன்,  ஆறுகள் வடிகால்கள் முறையாக பராமரிக்கபடுவதற்கு தேவையான முன்மொழிவுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் முன்வைக்கவேண்டுமென இணைப்புக் குழு தலைவர் கேட்டுக்கொண்டார். 
அக்கரைப்பற்றில் அரச அலுவலகங்களுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுவதாக திணைக்களத்தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அரச அலுவலகங்களினை மீள ஒழுங்கமைக்க குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.
விவசாயக் காணிகளிலிருந்து அதி உச்சப்பயனை பெறுவதற்கான  வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன் கரும்புக் காணிகளில் கரும்புச் செய்கையுடன் மக்கள் கூடிய இலாபம் பெறுவதற்கான மாற்று விலங்கு வேளான்மை செய்வது தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் விவசாய வீதிகளினை புணரமைத்தல்,நீர்ப்பாசன மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீர்  வழங்குதல் போன்ற மக்களின் அத்தியவசிய தேவைகளை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாகவும் கலந்து கொண்ட திணைக்களத் தலைவர்களினால் தீர்வு எட்டப்பட்டது .

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article