Sunday, December 22, 2024

இந்திய இழுவைப்படகு விவகாரம் : கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கை

Must read

மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கை

மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும்  கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(10) ஒருமணியளவில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் வி அருள்நாதன் மற்றும் வண்ணாங்குளம் கடற்தொழில் அமைப்பின் தலைவர் வே.சிவகுமார் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்தபோதே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்  
நேற்று அதற்கு முன்னாள் முல்லைத்தீவு கடலில் இந்தியாவின் இழுவைப்படகுகள் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் இது தொடர்பில் கடற்படைக்கும் நீரியல் வளத்திணைக்களத்திற்கும் தெரியப்படுத்திய போதும் கடற்படையினர் வருவதாக சொன்னார்கள் ஆனால் எந்த விதமான படகும் வரவில்லை துரத்துவதாக சொன்னார்கள் ஆனால் இல்லைநேற்று இரவு  மாவட்டத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற படகுகள் அனைத்தும் கரையினை வந்துள்ளார்கள். காரணம் வலைபடுப்பதற்கு முடியாத நிலையில் படகினை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்கள் அவ்வாறு இந்திய இழுவைப்படகுகள்.
இந்திய இழுவைப்படகினால் தூண்டில் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 5 பேரின் தூண்டில் தொழில் அழிவடைந்துள்ள அவர்கள் கரை வந்து பிள்ளைகளுடன் அழுதுகொண்டு நிக்கின்றார்கள்.ஜனாதிபதியிடம் நாங்கள் கோரி நிக்கின்றோம் கடற்படையினர் ஏன் எல்லை தாண்டி வுருவதற்கு அனுமதிக்கின்றார்கள்
வடக்கு கிழக்கில் மட்டும் இவ்வாறான நிலை இன்று தீவு பகுதிகளிலும் நிறைய இந்திய இழுவை படகு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது கடற்படையின் அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளர்கள் நல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாது வன்முறையினை கையில் எடுக்கவேண்டி வரும்.

Shanmugam Thavaseelan

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article