Sunday, May 5, 2024

வடமாகாணம் தழுவிய சுகாதார உத்தியோகத்தர்களின் தொழில் சங்க போராட்ட நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக  முன்னெடுக்கப்பட்டுள்ளது

Must read

இன்று  08.03.2023 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடு தழுவியரியில் சுகாதார துறையினர் பாரிய தொழில் சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

அந்த வகையில்  வடமாகாண சுகாதார துறையினை சார்ந்தவர்களும் சுகயீனவிடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்  சுகாதார துறையினர் தொழில் சங்கம் சார்பான சுகயீன விடுமுறை போராட்டத்தினையும் கவனயீர்ப்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலை முன்பாக திரண்ட உத்தியோகத்தர்கள் பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் வீதியில் பேரணியாக சென்று கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளர்கள்.

இதில் ஸ்ரீலங்கா  ஜனரஜ சுகாதர சேவைகள் சங்கத்தின் தலைவர் விமலரத்தின வடமாகாணா ஜனரஜ சுகாதர சேவைகள் சங்கத்தின் தலைவர் எம்.மில்ஹான், வடமாகாண ஜனரஜ சுகாதரசேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் பார்த்தீபன், ஜனரஜ சுகாதரசேவைகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தலைவி நாமகள் மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வரி உயர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்ளை தொடர்பிலும் மின்சார கட்டணத்தினை குறைக்க கோரியும் இன்றைய  நிலையில் சுகாதார ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை பூராகவும் 24 மணிநேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் இந்த நிலையில் மூன்று தடவைகள் எங்கள் கோரிக்கையினை அரசாங்கத்திடம் கோரியிருந்தும் எந்தவிதமான சமிக்கையும் இல்லாமல் உதாசீனப்படுத்திய இந்த அரசிற்கு எதிராக 24 மணிநேர போராட்டத்தில் குதித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கையினை தீர்த்து தராத நிலையில் எதிர்வரும் தினங்களில் பாரிய போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளோம் நாங்கள் போராட்டத்தில் குதித்துள்ள காரணத்தினையும் இந்த அரசாங்கம் தான் ஏற்கவேண்டும் நோயாளர்களுக்கான மருந்துகள் கிடைக்கப்பெறவில்லை அரச மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்று சொல்கின்றார்கள் தனியார் துறைகளில் எவ்வாறு அந்த மருந்துகள் கிடைக்கின்றது பணம் கொடுத்து மருந்தினை பெறவேண்டிய நிலை இன்று நாட்டில் வந்துள்ளது இது இலங்கை வாழ் மக்களின் பிரச்சினை, பணம் இல்லை என்கின்றார்கள் தனியார் துறைகளில் எல்லா மருந்தும் கிடைக்கின்றது சுதந்திர தினத்திற்காக கோடிக்கணக்கில் பணத்தினை செலவு செய்தூள்ளீர்கள் அதனை ஏன் நோயாளர்களுக்காக  செலவு செய்யமுடியாது?

இன்று நாடு முழுவதும் 40ற்கும் அதிகமான சுகாதார துறை சங்கங்கள் வீதியில் இறங்கியுள்ளார்கள்
இன்று எங்கள் சம்மளத்தை 15 வீதத்தால் குறைப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் இன்னும் எங்களை துன்பப்படும் நிலைக்கு அரசாங்கம் எங்களை கொண்டு சென்றுள்ளது.

பாமர மக்கள் எவ்வாறு வாழமுடியும் எங்கள் உயிரில் அரசாங்கம் கைவைத்துள்ளது. மக்களுக்கான அத்தியாவசிய சேவையில் பணியாற்றி வரும் சுகாதார பிரிவினை சேர்ந்த நாங்கள் இன்று நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் இந்த போராட்டங்கள் தொடரும்
எங்கள் நாட்டின் நிலமையினை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் பொருளாதார விலையேற்றத்தினை குறைக்கவேண்டும், வரி வட்டி வீதத்தினை குறைக்கவேண்டும்,மின்சார கட்டணத்தினை குறைக்க வேண்டும்,குழந்தைகளுக்கு பால்மா வாங்கிக்கொடுக்கமுடியாத நிலைக்கு தாய்மார்கள் இன்று தள்ளப்பட்டுள்ளோம் இந்த கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று அரசினை கேட்டுக்கொள்கின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Shanmugam Thavaseelan
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article