Wednesday, January 22, 2025

பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு

Must read



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் மணல் அகழ்வை நிறுத்துவதற்காக நேற்று (3) சென்ற நிலையில் மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும் குறித்த மணல் அகழ்வை மேற்கொள்ளும் நபரால் ஆபாச வார்தைகளால் அரச அதிகாரிகள்,பொலிஸார் திட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளினால் அழுத்தங்களுக்கும் உள்ளக்கப்பட்டுள்ளர்.
சம்பவ இடத்தில்  இலுப்பை கடவை பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதும் சம்மந்தப்பட்ட நபர் மீதோ சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீதோ எந்த சட்ட நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
 மேலும் மணல் அகழ்வுக்கு பயன் படுத்தப்பட்ட வாகனங்களை கையகப்பட்டுத்த கூட பொலிஸார் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உரிய அனுமதி இன்றி காடுகள் பல மாதங்களாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அரச காணியில் மணல் அகழ்வும் இடம் பெற்றுள்ள நிலையில் இலுப்பைகடவை பொலிஸாரோ வனவள திணைக்களமோ எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்..குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் காணொளி வெளியாகி உள்ளது.


வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article