Wednesday, January 22, 2025

அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று மட்டக்களப்பு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம்

Must read

UNDP நிறுவனத்தின் அனுசரணையுடன் ESDF நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டத்தின் சனசமூக நிலையங்களுக்கிடையிலான அந்நியோன்னியத்தை ஏற்படுத்தல் திட்டத்தின் ஊடாக அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று களவிஜயம் ஒன்றின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது. நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இவ்விஜயத்தின் இரண்டாம் நாளில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு ரிதம் சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்கு வருகை தந்திருந்தனர்.

மேற்படி குழுவினரை ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றதுடன், கள விஜயம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.

இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன், UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் பத்மசிறி சுபசிங்க, களத் திட்ட செயற்பாட்டாளர் நாமல் பத்திரணகே உள்ளிட்ட நிறுவனத்தினர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன்,  அநூராதபுரம், பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், அப்பிரதேசங்களின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ESDF நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரதிநிதிகள், ரிதம் சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன், உபதலைவர் மு.சிவஞானம், உபசெயலாளர், திருமதி வாசுகி நடேசராசா உள்ளிட்ட அங்கத்தவர்கள், ரிதம் இளைஞர் கழகத்தின் உபதலைவர் பி.பிரவீன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சனசமூக நிலையங்களுக்கிடையிலான செயற்பாட்டு விடயங்கள் பகிரப்பட்டதுடன், ரிதம் சனசமூக நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற, மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அறிக்கையிடுகை, நிதி சேகரிப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றன தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து குழுவினர் புதிதாக அமைக்கப்பட்ட ரிதம் சனசமூக நிலைய கட்டித்தைப் பார்வையிட்டதுடன், புளியந்தீவு ஆனைப்பந்தி ஆலயத்திற்கான விஜயத்தினையும் மேற்கொண்டு வழிபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article