Wednesday, January 22, 2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு

Must read

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம், லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கீர்த்திகா மதன்அழகன் உரையாற்றுகையில் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு ஒரு வருடத்திற்கு 1500 அலகு உதிரம் தேவைப்படுவதாகவும், தலசிமியா நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் போன்றவர்களுக்கு அதிகளவான குருதி தேவைப்படுவதாக தெரிவித்தார்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்ட போது வேறு மாவட்டங்களிடமிருந்தே குருதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக எமது மாவட்டத்தில் குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகின்றமையினால் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவருபரஞ்சினி முகுந்தன் , 231 படைப்பிரிவின் பிரிகேடியர் திலுப்ப பண்டார, பிரதம கணக்காளர் திருமதி இந்திராதி மோகன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி.கே.கணேசலிங்கம், பிரதம பொலிஸ் அத்தியட்சகர் எல்.பி.ஜே.பி.குமாரசிங்க, சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் லலித் பெரேரா, மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், உதவி கல்வி பணிப்பாளர்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி.ஜே.கலாராணி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் க. மதிவண்ணன், சர்வதேச லயன் கழகத்தின் முன்னாள் சர்வதேச பணிப்பாளர் லயன் எந்திரி.கே.தனபாலன், பி.எம்.ஜே.ஏப், கழகத்தின் ஆரம்ப தலைவர் லயன்.என்.புஷ்பாகரன் எம்.ஜே.எப் கழகத்தின் தலைவர் வை.திரவியநாத் மற்றும் மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.ஏப், கழகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் இவ் இரத்ததான நிகழ்விற்கு இராணுவம், பொலிஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட செயலகம், நில அளவை திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் குருதி வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article