Wednesday, January 22, 2025

மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடமகா சிவராத்திரி விழா, புண்ணிய தீர்த்த அபிடேகம்

Must read

மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 18.02.2023 ஆம் திகதி காலை 5.30 மணி தொடக்கம் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சமுத்திர தீர்த்தம் அடியார்களது கரங்களால் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கும் சிவலிங்கத்திற்கும் தங்களது திருக்கரங்களால் அபிஷேகம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து
காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருவாசமுற்றோதல் மட்டக்களப்பு சைவத் திருநெறி மன்றத்தினரால் நடாத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பி.ப 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை முதலாம் சாம பூஜை உபயகாரர்களான மட்டக்களப்பு கல்லடி நீர்ப்பாசன திணைக்களம் [மத்தி] உத்தியோகத்தர்களினால் நடாத்தப்படவுள்ளது.

முதலாம் சாம பூஜை முடிவடைந்ததும் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் சாம பூசைகள் காயத்ரி குடும்பத்தினர்களால் நடாத்தப்படவுள்ளது.

அத்தோடு இரண்டாம் சாம பூஜை முடிவடைந்த பின்னர் மகா யாகம் காயத்ரி குடும்பத்தினர்களால் இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளதாக
ஸ்ரீகாயத்திரி பீடத்தின் செயலாளர்
த.குணரெத்தினம் தெரிவித்திருந்ததுடன், இவ்விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு இறையாசியை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article