Tuesday, December 3, 2024

சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளராக ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு

Must read

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத் தானாக முன்வந்து பதவி விலகியமை காரணமாக வெற்றிடமாக இருந்த தவிசாளர் பதவி வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.எம்.எம்.நௌஸாத் அண்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய நடைபெற்ற சபை அமர்வில் ஐ.எல்.எம்.மாஹிர் புதிய தவிசாளராக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சவூதி அரேபிய தூதரகத்தின் முன்னாள் தொடர்பாடல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த உள்ளுராட்சி சபைகளில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டாவது சபையை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article