Tuesday, December 3, 2024

3 மாணவர்கள், ஆசிரியர் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி

Must read

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை மீனாடசியோடை குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள், தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,

களுமுந்தன்வெளி கஜமுகன் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஆசிரியர்களும், இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களும், தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள் நாற்பதுவட்டடை மீனாடசியோடைக் குளம் அமைந்துள்ள பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை(12.02.2023) சுற்றுலா சென்றுள்ளனர்.

ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து மதிய உணவை சமைத்து உண்டுள்ளனர்.

பின்னர் 3 மாணவர்கள் அங்கிருந்த குளத்தில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியை எடுத்துக் கொண்டு குளத்திற்குள் சென்றுள்ளனர். தோணி குளத்தின் நடுவிற்குச் சென்றபோது தோணியிலிருந்த தூவாரத்தின் வழியே நீர் தோணியை நிரப்பியுள்ளது.

அதில் பயணித்த மாணவர்கள் கூக்குரலிட்டு சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆசிரியரான கிவேதன் குளத்தில் நீந்திச் சென்று மாணவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்று 4 பேரும் மிகவும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அக்கிராமம் மாத்திரமின்றி அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article