உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2023 ஆந் திகதி முதல் 09.02.2023 ஆந் திகதி நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 21 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
இவற்றில் 19 முறைப்பாடுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இரு முறைப்பாடுகள் நிறைவுறுத்தப்படாமல் உள்ளதுடன், அவற்றுள் மட்டக்களப்பு மாநகரசபை 04, காத்தான்குடி நகரசபை 02, ஏறாவூர் நகர் நகரசபை 05, கோறளைப்பற்று மேற்கு 01, கோறளைப்பற்று பிரதேச சபை 01, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை 01, மண்முனைப்பற்று பிரதேச சபை 05, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை 01 மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தொடர்பாக 01 முறைப்பாடும் பதிவாகியுள்ளது.
அதேவேளை போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, வாகரை ஆகிய உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் தேர்தல் தொடர்பான எதுவித முறைப்பாடுகளும் குறித்த கால எல்லைக்குள் பதிவாகவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.