Thursday, November 14, 2024

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்

Must read

இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான  தைப்பூசத்தை முன்னிட்டு  கிழக்கு.மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில்இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

இந்து மக்களின் வாழ்வில் தமது நற்காரியங்களை தொடங்குவதற்கு தை மாதத்தில் வரும். தைப்பூச தினம் மிக முக்கியத்ஒன்றாகும். 

 அட்சய திதி தினம். இந்த இவ்விரு நாட்களிலும் இந்து மக்கள் தாம் நற்காரியங்களான திருமணம் புதுமனை புகுதல்.வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல். புதிய சொத்துக்கள் வாங்குதல்  என பலதரப்பட்ட நற்காரியங்களை இந்ததினத்தில். முன்னெடுப்பது வழமையாகும்.

இதேவேளை இன்றைய தைப்பூச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொத்து குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. 

இன்று காலை ஆலய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினரால்.புதிர் எடுக்கும் இடத்தில் சூரியனுக்கும் நெற்கதிர்களுக்கும் விசேட பூஜைகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியமுறைப்படி அறுவடை செய்யப்பட்டு அந்த நெற்கதிர்கள் ஆலயத்தில் உள்ள. தெய்வங்களுக்கு வைத்து வழிபாடுசெய்யப்பட்டது.

அதன்பின்னர். இன்றைய பூசையில் கலந்து கொண்ட பெருமளவிலான பக்த அடியார்களுக்கு குறைவில்லாத செல்வம் வேண்டிநெற்கதிர்கள் ஆலய நிர்வாகத்தினரால். வழங்கி வைக்கப்பட்டது. 

இதனை தங்களது வீடுகளில் உள்ள. பூஜை அறையில் வைத்து வழிபட்டால் இந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வம்கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article