Sunday, December 22, 2024

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற 2ம் நாள் ஆர்ப்பாட்டம்

Must read

வடக்கு கிழக்கு மக்களின் நிரந்தரமான மீள பெற முடியாத அரசியல் தீர்வுக்காக வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இன்று (06) காலை 11.30 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வினை வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்றைய தினம் 05 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் 10ம் திகதி வரை தொடர் போராட்டமாக இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக இடம் பெற்றது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article