Wednesday, January 22, 2025

மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபருக்கு நிர்வாக சேவை அதிகாரிகளினால் பிரிவுபசாரம்.

Must read

மட்டக்களப்பு மாவட்ட  செயலக  அரசாங்க அதிபரின் பிரிவுபசார நிகழ்வு மட்டக்களப்பு  மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்   தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தின் மாவட்ட  அரசாங்க அதிபராக 31.12.2022 வரை மகத்தான சேவையை  மக்களுக்கு இன்முகத்துடன்  ஆற்றிய  மாவட்ட  அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன்  அவர்களின் சேவை நலன் பாராட்டு  மற்றும் பிரிவுபசார நிகழ்வு  சிறப்பாக  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களுக்கு     நினைவுச்சின்னங்களை  நிர்வாக சேவை அதிகாரிகளினால்  வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

இந் நிகழ்வில்,மேலதிக அரசாங்கஅதிபர் திருமதி.நவருபரஞ்சினி  முகுந்தன் ( காணி), 14 பிரதேச செயலாளர்களும், உதவி பிரதேச செயலாளர்களும் ஏனைய திணைக்களங்களில் பதவி நிலை கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையை சேந்த அதிகாரிகளும்  கலந்துகொண்டனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article