Sunday, December 22, 2024

அகில இலங்கை தேசிய மட்ட அழகியல் நடன போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் சாதனை.

Must read

கல்வி அமைச்சினால்  அநுராதபுரத்தில் நடாத்தப்பட்ட அகில இலங்கை தேசிய மட்ட அழகியல் நடனபோட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயத்திலிருந்து பங்குபற்றிய ஐந்து போட்டிகளிலிலும் முதலிடத்தைப்பெற்றுள்ளது. அந்த வகையில் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை ஒயிலாட்டம், உழவர்நடனம், செம்பு நடனம், ஆகிய போட்டிகளில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அதுபோல் பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம், காவடியாட்டம், செம்பு நடனம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியில்முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று பாடசாலைகளுக்கும், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள, களுதாவளை மகாவித்தியாலயம் தேசியபாடசாலை மற்றும் பெரியபோரதீவு பாரதிவித்தியாலயம், ஆகிய மாணவர்களுக்கும் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் மற்றும்பெற்றோர்ளுக்கும், கல்விச் சமூகம், மற்றும் பழைய மாணவர்கள், உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துதுள்ளனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article