Sunday, December 22, 2024

மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வு – 2022

Must read

“சமயங்கள் நமக்காக – நாம் சமூகத்திற்காக” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு எகெட் கரீத்தாஸ் நிறுவனத்தின் மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல் சமயங்கள் சங்கமிக்கும் கலாசார நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு எகெட் கரீத்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி எ.ஜேசுதாசன் அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, சர்வ மதத்தலைவர்களின் ஆசிகளுடன் ஆரம்பமான மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வில் பல் சமய கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் கலை நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“சமயங்கள் நமக்காக – நாம் சமூகத்திற்காக” எனும் தொனிப்பொருளில் பல சமயங்கள் சங்கமித்த 2022 ஆம் ஆண்டிற்கான இறுதி நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள்,  மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் இளைஞர் கழக உறுப்பனர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article