Wednesday, December 25, 2024

யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை

Must read

யானைகளது நடமாட்டம் அதிகரித்து வரும் கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர்  வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தவிசாளரின் பணிப்புரைக்கமைவாக பொது மக்களின் அனுசரணையுடன் மஜ்மா நகர் கிராமத்தில் தெருமின் விளக்குத் தொகுதிகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

குறித்த பணியினை மேற்கொண்ட தவிசாளர் மற்றும் பலத்த மழை, காற்று, குளிர் போன்ற இயற்கை சவால்களுக்கு மத்தியில் இப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பிரதேச சபையின் மின்னியலாளர் யூ.எல்.ஜெமீல், ரவீந்திரதாஸ் மற்றும் ஏ.பி.பௌசுல் ஆகியோருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article