Thursday, November 14, 2024

தேசிய உற்பத்தித்திறன் விருது விழா – காத்தான்குடி தேசிய ரீதியில் இரண்டாமிடம்

Must read

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாமிடம் இடத்தை பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வானது அலரி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர்  தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய மூன்று பிரதேச செயலகங்களும் தேசிய ரீதியில் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற குறைந்தளவு பௌதீக மற்றும் மனித வளங்களை கொண்டு வினைத்திறனான  வகையில் பொதுமக்களுக்கான திருப்திகரமான  சேவையினை ஆற்றியமைக்காகவே இவ் விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article