Wednesday, January 22, 2025

மிக நீண்ட வரிசையில் மக்கள் பொற்றோல் வந்தால் வழங்கப்படும்_ நிர்வாகம்

Must read




மிக நீண்ட வரிசையில் மக்கள் பொற்றோல் வந்தால் வழங்கப்படும்_ நிர்வாகம்
முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற கரைத்துறைபற்று பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெற்றோல் வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பெற்றோல் பெற்றுக் கொள்ள மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்திருக்கின்றனர்
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை(முல்_88),சிலாவத்தை தெற்கு(முல்_89),கள்ளப்பாடு தெற்கு(முல்_90),கள்ளப்பாடு வடக்கு(முல்_91),வண்ணாங்குளம்(முல்_92),முல்லைதெற்கு(முல்_93),செல்வபுரம்(முல்_94),கோயிற்குடியிருப்பு(முல்_95), மணற்குடியிருப்பு(முல்_96),முல்லைப்பட்டினம்(முல்_97),முள்ளிவாய்க்கால் கிழக்கு(முல்_98),முள்ளிவாய்க்கால் மேற்கு(முல்_99),அம்பலவன்பொக்கணை.(முல்_100) ஆகிய பதின்மூன்று கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு மாத்திரமே எரிபொருள் (பெற்றோல்) வரும் பட்சத்தில் நாளை(02.07.2022) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்படும் எனவும் ஏனையவர்கள் வருகைதர வேண்டாம் என சங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்

சண்முகம் தவசீலன்

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article