Monday, December 23, 2024

சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து

Must read




மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்  வைரமுத்து .யோகேஸ்வரன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டமொன்றை மேற்கொண்டார்.தமிழர் விடுதலை கூட்டணியின் வாகநேரி வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இவர் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நபராவார்.எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு அகியவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை,அத்தியாவசியப் பொருட்க்களின் விலையேற்றம் ஆகியவற்றினால் மக்கள் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.நாடு அனைத்து துறைகளிலும் வங்குரோத்து நிலையினை அடைந்து விட்டது.என தெரிவித்து இவ் அரசிற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தார். இதனையடுத்து ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்த சபை அமர்விலும் கலந்து கொண்டு நாட்டில் பொது மக்கள் எதிர்கொள்ளும்  அனைத்து பிரச்சினைகள்  குறித்து பிரேரணைகளை முன்வைத்தார்.



ருத்ரா,

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article