Monday, December 23, 2024

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Must read

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 4 மணியிலிருந்து 6 வரையிலான மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள வந்தாறுமூலையிலிருந்து செங்கலடி வரை சுமார் இரண்டு கிலோமீற்றர் வரை இப்பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியூடாக பயணித்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துஐற அமைச்சர் நாமல் ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியவர்களின் முகக் கவசங்களை அணிந்து அவர்களைப் போன்ற உடையணிந்து முகபாவனை நடப்பாவனை செய்தவண்ணம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடுன், கையில் விலங்கிடப்பட்ட மாணவர் பதாகையை ஏந்தியவாறு சென்றார்.

ஆர்;ப்பாட்டத்தில் கலந்கொண்டோர், விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப்பணிகளை உடனடியாக ஆரம்பியுங்கள்!, மனித மற்றும் பௌதீக வளங்களை விரிவாக்கம் செய்யுங்கள்!, வசதிகள் இல்லை, பயிற்சியாளர்கள் இல்லை, மானியங்களை ஒதுக்கி 2023 விளையாட்டுப் போட்டியினை பல்கலைக்கழக வளாகத்தினுள் நடாத்துங்கள்!,பல்கலைக்கழகம் கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்காகவும் பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்! , திருத்தங்கள் வேண்டாம்பொ, துமக்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள், கொத்தலாவல சட்டமூலம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்! உள்ளிட்ட கோசங்களையும் ஏழுப்பினர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article