Friday, January 10, 2025

ஒட்டுசுட்டான் பொலிஸாரால் பத்து பேர் கைது

Must read



நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் (பொதுஜன பெரமுன கட்சி) மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தண்ணிமுறிப்பு பகுதியில் எதுவித அனுமதியும் அற்ற நிலையில் பாரிய இரண்டு கற்களை அகன்று கனரக வாகனங்களின் கொண்டு சென்றவேளை இராணுவத்தினரின் வீதிசோதனை நடவடிக்கையின் போது மறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொதுஜனபெரமுன கட்சியின் முன்னாள் மாகாணசபைஉறுப்பினர் மற்றும் பெண் உள்ளிட்ட 10 பேரே இவ்வாறு ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். பாரிய கல்லினை ஏற்றிசென்ற வாகனம் மற்றும் பட்டாவாகனம் மற்றும் சொகுசு வாகனம் என்பன ஒட்டுசுட்டான் பொலீசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ளது புதையல் தோண்டும் நடவடிக்கை என பொலீசாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலீசார் மேற்கொண்டுவருவதுடன் கைதானவர்களையும் சான்றுபொருட்களையம் நீதிமன்றில் முற்படுத்தும் சட்டநடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Shanmugam Thavaseelan

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article