Wednesday, January 22, 2025

தராகி டி.சிவராம் 11ஆம் ஆண்டு ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு

Must read

battinews at Jaffna  (7)படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் தராகி டி.சிவராம் 11ஆம் ஆண்டு ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணத்தில் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் நடைத்தப்பட்டது.
இந்த நாள் யாழ் ஊடக அமையத்தினால் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாளாக அறிவிக்கப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பான நீதிமன்றக்கட்டத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வுகள் நேற்று மாலை 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பிற்பகல் 03.30 பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை வெளிடப்பட்டது.
நினைவுரைகளை கலாநிதி சி.ரகுராம், ஊடக சுதந்திரத்துக்காக செயற்பாட்டுக் குழுவின் தலைவரும் லேக் கவுஸ் நிறுவன ஆசிரியர் பீடப் பிரதானியுமான சமன் வகாராய்ச்சி, அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான நிலாந்தன், பாசன, சந்தேசிய பண்டார, அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம், சிவராமின் நண்பர் தவச்செல்வன் ஆகியோர் ஆற்றினர்.
இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்காக செயற்பாட்டுக் குழு ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றிருந்ததுடன் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல ஊடக நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Jaffna Sivaram 11 MEmorial Program (1) Jaffna Sivaram 11 MEmorial Program (2) Jaffna Sivaram 11 MEmorial Program (3) Jaffna Sivaram 11 MEmorial Program (4) Jaffna Sivaram 11 MEmorial Program (5) Jaffna Sivaram 11 MEmorial Program (6) Jaffna Sivaram 11 MEmorial Program (7) Jaffna Sivaram 11 MEmorial Program (8) Jaffna Sivaram 11 MEmorial Program (9) Jaffna Sivaram 11 MEmorial Program (10)

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article