புகைப்படக்கலையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியின் பொருட்டு முதல் முறையாக இந்த வருடத்தில் அரச புகைப்பட விருது வழங்கல் விழாவை நடத்துவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இவ்விழாவும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை நெலும் பொக்குண கட்டடத் தொகுதியில் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றன.
அரசின் பங்களிப்புடன் உயர்தரத்துடனான ஆக்கபூர்வமான ஒரு புகைப்படக் கலையை உருவாக்குவதும் உயர்தரமான இரசனையை உருவாக்குவதும் இவ்விழாவின் நோக்கமாகும். கலைசார் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தொடர்பாடல் ஊடகமாக புகைப்படம் பிடித்தலை பரவலாக்கும் பொருட்கள் முறையான கல்விசார் அமைப்பு அரச மட்டத்தில் தாபிப்பதும் மற்றுமொரு நோக்கமாகும்.
மேலும் புகைப்படக் கலையை சிறந்த தரமான ஒரு ஊடகமாக நடத்திச் செல்வதற்காக தேசிய மட்டத்தில் செயல்முறை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல் அரசமட்டத்தில் புகைப்படமெடுத்தல் தொடர்பாக தகுந்த தொழில்சார் பெறுமதியை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அடங்கும்.
இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புகைப்படப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஆக்கங்களை மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக அருகிலுள்ள பிரதேச செயலகத்துக்கோ மாவட்ட செயலகத்துக்கோ அனுப்புதல் வேண்டும்.
வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார அம்சங்கள், இயற்கை வன வாழ்வு மற்றும் நிலக்காட்சிகள், வெகுசன ஊடகம் மற்றும் விளையாட்டு, பெருவிழா சந்தர்ப்பங்கள் ஆகிய எந்தவொரு தலைப்பின் கீழும் எடுக்கப்படும் ஆக்கபூர்வமான புகைப்படங்களை அனுப்பலாம். மேலும் திறந்த பிரிவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலைப்பின் கீழ் எடுக்கப்படும் புகைப்படங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் போட்டியாளர்கள் இந்தப் பிரிவுகளில் பல பிரிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒரு பிரிவுக்காக முன் வைக்கக்கூடிய ஆக்கங்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை நான்காகும்.
ஐந்து பிரிவுகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்களுக்கு பணப்பரிசில் வழங்கப்படும். 1ஆம் பரிசு 25 ஆயிரம் ரூபாவும் 2 ஆம் பரிசு 15 ஆயிரம் ரூபாயும் 3ஆம் பரிசு 10 ஆயிரம் ரூபாவும் ஆகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தலா 10 ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கல்யாணக் காட்சிகள் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற புகைப்படங்கள் தம்பதிகளை உள்ளடக்கியிருந்தால் அவர்களிடம் இருந்து எழுத்து மூலமான சம்மதத்தைப் பெற்று கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.
கல்யாணக்காட்சிகள் தொடர்பாக அனுப்பப்படும் புகைப்படங்கள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிவரையான காலத்துள் எடுக்கப்பட்ட உண்மையான கல்யாண காட்சிகள் தொடர்பான புகைப்படங்களாக இருத்தல் வேண் டும்.
இலங்கைப் பிரஜைகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். புகைப்படங்கள் சுய ஆக்கங்களாகவும் ஏற்கனவே தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் பரிசிலோ சான்றிதழோ பெறாதவையாகவும் ஏற்கனவே எதிலாவது பிரசுரிக்கப்படா தவையாகவும் இருத்தல் வேண்டும். போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை யும் மேலதிக விபரங்களையும் பிரதேச செயலகம், மாவட்ட செயல கம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள லாம். WWW.Culturaldept.gov.lk என்ற இணை யத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய் தும் பெறமுடியும்.புகைப்படக்கலையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியின் பொருட்டு முதல் முறையாக இந்த வருடத்தில் அரச புகைப்பட விருது வழங்கல் விழாவை நடத்துவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இவ்விழாவும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை நெலும் பொக்குண கட்டடத் தொகுதியில் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றன.
அரசின் பங்களிப்புடன் உயர்தரத்துடனான ஆக்கபூர்வமான ஒரு புகைப்படக் கலையை உருவாக்குவதும் உயர்தரமான இரசனையை உருவாக்குவதும் இவ்விழாவின் நோக்கமாகும். கலைசார் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தொடர்பாடல் ஊடகமாக புகைப்படம் பிடித்தலை பரவலாக்கும் பொருட்கள் முறையான கல்விசார் அமைப்பு அரச மட்டத்தில் தாபிப்பதும் மற்றுமொரு நோக்கமாகும்.
மேலும் புகைப்படக் கலையை சிறந்த தரமான ஒரு ஊடகமாக நடத்திச் செல்வதற்காக தேசிய மட்டத்தில் செயல்முறை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல் அரசமட்டத்தில் புகைப்படமெடுத்தல் தொடர்பாக தகுந்த தொழில்சார் பெறுமதியை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அடங்கும்.
இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புகைப்படப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஆக்கங்களை மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக அருகிலுள்ள பிரதேச செயலகத்துக்கோ மாவட்ட செயலகத்துக்கோ அனுப்புதல் வேண்டும்.
வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார அம்சங்கள், இயற்கை வன வாழ்வு மற்றும் நிலக்காட்சிகள், வெகுசன ஊடகம் மற்றும் விளையாட்டு, பெருவிழா சந்தர்ப்பங்கள் ஆகிய எந்தவொரு தலைப்பின் கீழும் எடுக்கப்படும் ஆக்கபூர்வமான புகைப்படங்களை அனுப்பலாம். மேலும் திறந்த பிரிவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலைப்பின் கீழ் எடுக்கப்படும் புகைப்படங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் போட்டியாளர்கள் இந்தப் பிரிவுகளில் பல பிரிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒரு பிரிவுக்காக முன் வைக்கக்கூடிய ஆக்கங்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை நான்காகும்.
ஐந்து பிரிவுகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்களுக்கு பணப்பரிசில் வழங்கப்படும். 1ஆம் பரிசு 25 ஆயிரம் ரூபாவும் 2 ஆம் பரிசு 15 ஆயிரம் ரூபாயும் 3ஆம் பரிசு 10 ஆயிரம் ரூபாவும் ஆகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தலா 10 ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கல்யாணக் காட்சிகள் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற புகைப்படங்கள் தம்பதிகளை உள்ளடக்கியிருந்தால் அவர்களிடம் இருந்து எழுத்து மூலமான சம்மதத்தைப் பெற்று கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.
கல்யாணக்காட்சிகள் தொடர்பாக அனுப்பப்படும் புகைப்படங்கள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிவரையான காலத்துள் எடுக்கப்பட்ட உண்மையான கல்யாண காட்சிகள் தொடர்பான புகைப்படங்களாக இருத்தல் வேண் டும்.
இலங்கைப் பிரஜைகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். புகைப்படங்கள் சுய ஆக்கங்களாகவும் ஏற்கனவே தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் பரிசிலோ சான்றிதழோ பெறாதவையாகவும் ஏற்கனவே எதிலாவது பிரசுரிக்கப்படா தவையாகவும் இருத்தல் வேண்டும்.
போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை யும் மேலதிக விபரங்களையும் பிரதேச செயலகம், மாவட்ட செயல கம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள லாம். WWW.Culturaldept.gov.lk என்ற இணை யத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய் தும் பெறமுடியும்.