Wednesday, January 22, 2025

பத்­தி­ரி­கைகள் ஏற்­ப­டுத்­து­கின்ற தாக்கம் என்றும் நிரந்­த­ர­மா­னது – ஷண்

Must read

எஸ்.டி.சிவ­நா­ய­கத்தின் 16ஆவது நினைவு தின சிறப்புக் கட்டுரை 


எஸ்.டி.சிவநாயகம், S.D.Sivanayagamஉயி­ரி­ழந்த பிண­ம­தனை உடை­மை­யாலும் உவப்­பில்லாக் கட­தாசிப் பூவி­னாலும் இயன்­ற­ளவும் மூடி இன்­புற்­றாலும் இறந்த பிணம் இறந்­த­துதான் உயிர்ப்­பங்­கில்லை!

பயின்­ற­துவோ பல நூறு நூலா­னாலும் பாவி­லக்­கணம் தேடிப்­ப­டித்­திட்­டாலும் முயன்­றெ­ழுதும் கவிதை வெறும் சொற்­கூட்­டன்றி முழங்கு பிறவிக் கவியின் முதிர் வாக்­காமோ?

காரி­கையோ கற்­ற­றியான் கவிதை பாடும் கலை­யி­னிலே வியன் பெற்றான் என்­றாலீது பாரி­னிலே புது­மை­யென்பார். கவிஞன் பட்டப் படிப்­ப­தனைப் படிப்­ப­தனால் ஆவ­தில்லை!

பேரி­னிலே ஒன்­றில்லை பிறப்­பி­லேதான் பிறக்­கின்றான் கவி­ஞ­னென்­பதோர் பேருண்மை. ஆரி­னிமேல் கவி­ஞ­னென்ற ஐயம் வேண்டாம். அவன் பாட்டில் உயிருண்­டா­வென்று மட்டும் பாரீர்!

யார் கவிஞன்? என்ற தலைப்பில் தியாகி என்ற புனை­ப்பெ­யரில் எஸ்.டி.சிவ­நா­யகம் எழு­திய மேற்­படி கவிதை வரிகள் 1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி எஸ்.டி.சிவ­நா­ய­கத்தை ஆசி­ரி­ய­ராகக் கொண்டு வெளி­வந்த ஐக்­கிய தீபம் பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மா­னது.

1946ஆம் ஆண்டுப் பத்­தி­ரி­கை­யு­லகப் பிர­வே­சத்­துக்கு முன்­ன­தாகப் பள்ளிப் பரு­வத்­தி­லேயே பாட­சாலைப் பத்­தி­ரி­கை­யொன்றின் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றிய அனு­ப­வமும் எஸ்.டி.சிவ­நா­ய­கத்­துக்கு உண்டு. ஐக்­கிய தீபம் பத்­தி­ரி­கைக்கு அடுத்து 1947ஆம் ஆண்டு தனது சொந்தப் பத்­தி­ரி­கை­யான உதயம் பத்­தி­ரி­கைக்கு ஆசிரி­ய­ரானார் சிவ­நா­யகம். இப்­பத்­தி­ரி­கையின் ஞாப­க­மா­கத்தான் பின்­னாளில் தன் மூத்த மக­னுக்கு உத­ய­நா­யகன் என்று பெயர் சூட்­டினார் போலும்.

மேற்­படி பத்­தி­ரி­கை­களின் அனு­ப­வங்கள் மூலம் 1948 ஆம் ஆண்டு தின­கரன் பிறகு சுதந்­திரன், வீர­கே­சரி, 1966 ஆம் ஆண்டு முதல் எம்.டி.குண­சே­னாவின் இன்­டி­பென்டன்ட் நியூஸ்­பேர்ப்பர்ஸ் ஸ்தாப­னத்­தி­லி­ருந்து வெளி­யான தின­பதி, சிந்­தா­மணி, சூடா­மணி என்று அவ­ரது பத்­தி­ரி­கை­யு­லகப் பவ­னி­களும் பணி­களும் அவரை ஜாம்­ப­வா­னாக்­கி­யது.

தியாகி, அர­ச­கே­சரி, நவ­ர­ச­கே­சரி, குயுக்­தியார், திரி­ஞானி என்று பல புனைப் பெயர்­க­ளுக்குச் சொந்­தக்­கா­ர­ரான எஸ்.டி.எஸ். எழு­திய ஆக்­கங்கள் ஏராளம். அத்­த­னையும் வாச­கர்­க­ளுக்குத் தாராளம்.

கதை, கட்­டுரை, கவிதை, இலக்­கியம், நாடகம், சினிமா, டி.வி. விமர்­ச­னங்கள், வினா விடை, பயணக் கட்­டு­ரைகள், சோதிடம், அர­சியல் கட்­டு­ரைகள், விமர்­ச­னங்கள், ஆன்­மீகம், வைத்­திய ஆலோ­ச­னைகள் என்று எல்லாத் துறை­சார்ந்த அனு­ப­வங்­க­ளையும் ஆற்­றல்­க­ளையும் அறிந்த அட்­டா­வ­தானி ஆசி­ரி­ய­ராகத் திகழ்ந்­த­வர்தான் எஸ்.டி.சிவ­நா­யகம் என்று சொன்னால் அது மிகை­யா­காது.

படித்­த­வர்கள், பண்­டி­தர்­களை மட்­டு­மல்­லாது பாம­ரர்­க­ளையும் கவ­ரக்­கூ­டிய அம்­சங்­களை எல்லாம் பத்­தி­ரி­கையில் அறி­மு­கப்­படுத்­திய கார­ணத்­தால்தான் சிந்­தா­மணி வார இதழ், இலங்கைத் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யு­லக வர­லாற்­றி­லேயே ஒரு இலட்சம் விற்­ப­னையில் சாதனை படைத்­தது.

அதற்­காகச் சிவ­நா­ய­கத்­துக்குக் கிடைத்த பரிசும் பாராட்­டும்தான் அந்தப் பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் பணிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக, ஆசி­ரி­ய­ரான அவ­ரையும் அங்­கீ­க­ரித்­தது!

அன்­றைய கால­கட்­டத்தில் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் பல­ராலும் பாராட்­டப்­பட்ட எஸ்.டி.சிவ­நா­ய­கத்தின் தின­பதி, சிந்­தா­மணிப் பாசறை மூலம் உரு­வாக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலங்­கையில் மட்­டு­மல்­லாது உல­கெங்கும் பரந்து பணி­யாற்றி வரு­கி­றார்கள்.

இன்­றைய கால கட்­டத்தைப் பொறுத்­த­வ­ரையில் வெகு­ஜனத் தொடர்புத் துறையில் பத்­தி­ரிகை, வானொலி, தொலைக்­காட்சி இவை­க­ளுக்­கி­டையில் போட்டி நடை­பெ­று­வது அனை­வரும் அறிந்­ததே.

இம்­மூன்றும் ஒரு சாதா­ரண நப­ரிடம் ஏற்­ப­டுத்தும் தாக்­கத்தின் வேறு­பா­டுகள் என்ன என்று அந்­தநாள் ஞாபக வானொலிப் பேட்­டியின் போது புவ­ன­லோ­ஜனி கேட்ட கேள்­விக்கு எஸ்.டி.சிவ­நா­யகம் அளித்த பதிலை இன்று நினைவு கூரு­வோ­மாக…….

மூன்று ஊட­கங்­களும் ஒரே வித­மான தாக்­கத்­தைத்தான் ஏற்­ப­டுத்­து­கின்­றன. ஆனால் வானொ­லியும் தொலைக்­காட்­சியும் மிக வேக­மாகச் சென்­ற­டைந்து விடு­கி­ன்றன. ஆனால் பத்­தி­ரி­கை­களோ மறுநாள் காலைதான் அந்தச் செய்­தியைத் தர­மு­டியும். ஆனால் பத்­தி­ரிகை ஏற்­ப­டுத்தும் தாக்கம் நிரந்­த­ர­மா­னது. அது அச்­செ­ழுத்­துக்­களில் இருப்­பதால் ஒரு நிரந்­தரப் பதிவை வாச­கர்­க­ளு­டைய மனதில் ஏற்­ப­டுத்­து­கின்­றது.

ஏனென்றால் ஒரு தடவை வானொ­லியில் கேட்­கலாம் அல்­லது டி.வியில் பார்க்கலாம். ஆனால் பத்திரிகை மூலமோ திரும்பத் திரும்பப் படிக்க முடிகிறது. அதனால் பத்திரிகை ஏற்படுத்தும் தாக்கம்தான் நிரந்தரமானது என்றார் எஸ்.டி.சிவநாயகம். அன்னாரது 16 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இவரது துணைவியார் மங்களாவதி சிவநாயகமும் கடந்த வாரம் 8 ஆம் திகதி தனது 88 ஆவது வயதில் காலமானார். பத்திரிகை ஆசிரியரான கணவருக்குப் பள்ளிக்கூட ஆசிரியையான பாரியாரும் பக்கத்துணையாக உதவிகள் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article