Sunday, December 22, 2024

யாழில். 11ஆவது சிவராம் ஞாபகார்த்த நிகழ்வு

Must read

sivaram-6படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தை வழங்கவும் என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர் தராகி- சிவராமுடைய 11வது ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஏப்ரல் 29ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு ஆகிய இணைந்து தராகி சிவராம் அவர்களின் 11 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த வருடம் இது போன்ற வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் 10ஆவது சிவராம் ஞர்பகார்த்த நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள 11ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் வடக்கு கிழகக்கு தெற்கு ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பங்கு கொள்ளவுள்ளனர்.

siva

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article