Thursday, November 14, 2024

2014ம் ஆண்டிலிருந்து இலங்கையின் காலநிலையில் கடுமையான மாற்றங்கள்

Must read

climate change in sri lankaமார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையான (ஆரம்பம்) காலத்தில் இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படும். இந்த காலநிலைத் தன்மையின் போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் இருப்பது சாதாரணமானதாகும். காற்று வீசுவது குறைதல், கீழ்வளிமண்டலத்தில் இருக்கும் நீரின் ஆவியாகும் தன்மை ஆகியவற்றால் அதிகமான வெப்பம் உணரப்படும்.

வளி மண்டலத்தில் உஷ்ணத்தின் அளவு 1-3 செல்சியஸ் அளவினால் அதிகரித்துக் காணப்படுகிறது. அது தவிர பாரிய அளவில் அதிகரிப்பு இல்லை. சாதாரணமாக மார்ச் மாதத்தில் கொழும்பு மாவட்டத்துக்கு இருக்க வேண்டிய வெப்பம் 31.7 செல்சியஸ் அளவிலான உஷ்ணம் ஆகும். என்றாலும் இந்த மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் உஷ்ணம் 33.3 ஆக உயர்ந்துள்ளது.

பெப்ரவரி, மார்ச் மாதங்கள் இரண்டிலும் காலநிலை அறிக்கைகளை அவதானிக்கும் போது இலங்கையில் கூடுதலான வெப்பம் கிடைக்கப் பெற்றது அல்லது பதிவு செய்யப்பட்டது அநுராதபுரத்திலாகும். அது 37.8 செல்ஸியஸ் ஆகும்.

இதற்குப் புறம்பாக இரத்தினபுரி, குருநாகல், யாழ்ப்பாணம், மகாஇலுப்பள்ளம, வவுனியா, பொலன்னறுவை, அநுராதபுரம், மொனராகல போன்ற மாவட்டங்களிலும் கூடுதலான உஷ்ணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலநிலை அறிக்கைகளின்படி மேல் வளி மண்டலத்தில் முகில்கள் இல்லாமை, இக்காலங்களில் மழை இன்மை போன்றவை காரணமாக வெப்பம அதிகரிப்பு ஏற்படுகிறது.

மனித உடலுக்கு உஷ்ணம் உணரப்படுவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு மூல காரணம் கீழ் வளி மண்டலத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்வதாகும். இங்கு வெப்பம் கூடுதலாக உணரப்படுவது சாதாரண நிகழ்வாகும்.

ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் வாரமாகின்ற போது மழை கிடைக்குமாயின் காணப்படும் உஷ்ண தன்மை குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் தற்போது காணப்படும் உஷ்ணநிலை நாட்டின் கூடுதலான உஷ்ண நிலை எனக் கூற முடியாது.

இலங்கையில் அதிக வெப்பம் கிடைக்கப் பெற்ற ஆண்டு 1982 ஆகும். அது வவுனியாவில் 40.1 செல்ஸியஸாக காணப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும் காலநிலைக்கு சூரியனும் சந்திரனும் நேரடியாக பாதிப்புச் செலுத்துவதனால் உலகத்திலே காலநிலை வேறுபாடுகளுக்கு இவை தாக்கத்தை செலுத்துகின்றன.

நாம் வாழும் புவி முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கு (365) ஒருமுறை சூரியனை சுற்றி வலம் வருகிறது. இங்கு புவி பயணிப்பது 23 பாகை சரிவாக ஆகும்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதி புவி சூரியனுக்கு அண்மிப்பதுடன் ஜனவரி மூன்றாம் திகதியாகும் போது புவி சூரியனுக்கு மிகவும் நெருக்கமாகின்றது. இந்த செயற்பாட்டின் பிரதிபலனாகத்தான் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் அதிகமான உஷ்ணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கு (150,000,000) பதினைந்து கோடி கிலோ மீற்றர் தூரத்திலேயே புவி அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட பாரிய தூரத்தில் புவி அமைந்திருப்பதனால் தான் இந்த இயற்கை வேறுபாடு நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபத்தோராம் திகதி சூரியன் மத்திய கோட்டுக்கு மேலால் பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது சூரியன் பயணிப்பது தெற்கு அரைக் கோளத்துக்கு சாய்வாகவாகும்.

இப்படி பயணிக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு ஆஜன்டீனாவுக்கு, வடஅமெரிக்காவுக்கு உஷ்ண தன்மை ஏற்படுவதோடு இந்த நிலை படிப்படியாக குறைவடைந்து சூரியன் வடக்குக்கு சாய்வடைந்து பயணிக்கின்ற நேரத்திலே இந்த நாடுகளுக்கு உஷ்ண தன்மை குறைந்து குளிர்த் தன்மை ஏற்படும்.

தற்போது இலங்கையில் காணப்படும் காலநிலை மாற்றத்துக்கு அதிக வெப்பத்துக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன. இதில் பிரதான காரணமாகவிருப்பது சூரியனைச் சுற்றி உள்ள கோள்கள் தூரப்பட்டிருப்பதாகும். சென்ற வருடங்களில் சூரியனோடு வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி. புதன் போன்ற கோள்கள் மிக நெருக்கமாக இருந்தன. இந்த நெருக்கம் மூலம் கூடுதலான வெப்பம் புவிக்கு வருவது கட்டுப்படுத்தப்படுகிறது.

என்றாலும் இவ்வாறு சூரியனைச் சுற்றி பயணிக்கும் கோள்களில் தாக்கம் (மாற்றம்) முழு காலநிலை தன்மைக்கும் தாக்கம் செலுத்துகிறது. சூரியன் இலங்கைக்கு மேலால் பயணிப்பது ஏப்ரல் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதிவரையிலாகும். இதை சூரியன் உச்சம் கொடுக்கும் காலமென கூறுவர் இப்படி சூரியன் உச்சம் கொடுக்கும் போது கூடுதலாக சூரிய ஒளி புவிக்கு (விழும் போது) படும்போது கூடுதலான உஷ்ணம் ஏற்படுவது சாதாரணமாக ஏற்படும் விடயமாகும்.

நட்சத்திர விஞ்ஞானத்துக்கு ஏற்ப காரணிகளை ஆய்வு செய்து பார்க்கும் போது 2014ம் ஆண்டிலிருந்து காலநிலையில் பலவித வேறுபாடுகள் (மாற்றங்கள்) ஏற்பட ஆரம்பமாகி உள்ளது. மழை இல்லாத வரட்சி போன்ற காலங்கள் ஏற்பட மேற்சொன்ன சூரியனை சுற்றி வலம் வரும் அமைப்பும் தாக்கம் செலுத்துகின்றன.

சென்ற வருடம் இந்த நாட்களில் இந்த அளவு கூடுதலான உஷ்ணம் காணப்படாமைக்கு மூல காரணம் சென்ற வருடம் இடையிடையே மழை ஏற்பட்டமை என்றாலும் துரதிஷ்டவசமாக இவ்வருடம் இந்நிலை முற்றாக மாறிவிட்டது. என்றாலும் உஷ்ணமான காலநிலை ஏற்படுவது இந்த வருடத்தில் மட்டும் அல்ல கடந்த காலங்களில் பெப்ரவரி மாதத்தில் தென்னை மர ஓலைகள் கருகி விழும் அளவுக்கு கடுமையான வரட்சி நிலவிய காலங்களும் வரலாற்றில் காணப்படுகிறது.

தென்னை மரங்களில் இருந்து ஒன்பது ஓலைகள் விழுவதனால் பெப்ரவரி மாதத்தை சிங்கள மாத முறைக்கு ஏற்ப நவம் மாதம் என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதிவரை நிலைக்கும் இந்த அதிக உஷ்ணதன்மை மனித உடலை பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதனால் சூரிய ஒளிக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய குடை மற்றும் பாதுகாப்பான உடை வகைகளை பயன்படுத்துவது நல்லது. இயன்றளவு பகல் வேளைகளில் பயணங்கள் செல்வதை தவிர்த்துக் கொள்வது வெட்ட வெளிகளில் விளையாட்டு மைதானங்களில் பகல்வேலைகளில் விளையாடுவது போன்றவற்றால் வெப்பத்தில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.

  • Thanks Thinakaran.lk-
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article