Wednesday, January 22, 2025

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென்பது பொய் -மேஜர் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக

Must read

DSC_0032ஆட்சி மாற்­றத்தின் பின்னர் வடக்கில் மீண்டும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான குற்­றச்­சாட்­டாகும். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் எந்த சூழ்­நி­லையும் இன்று வடக்கில் இல்லை என்று யாழ் கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக தெரி­வித்தார். வடக்கில் பொது­மக்­களின் காணி­களில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­ப­டு­வ­துடன் பொது­மக்­க­ளுக்­கான காணிகள் விரைவில் அவர்­க­ளி­டமே கைய­ளிக்க நட­வைக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பலாலி பாது­காப்பு தளத்தில் இன்று (27) ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் பாது­காப்பு தரப்­பினர் இடையில் விசேட கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்று இடம்­பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­ட­ளின்­போது தமிழ் ,சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, பிரதி ஊட­கத்­துறை அமைச்சர் பர­ண­வி­தா­ரன மற்றும் முப்­படை பிர­தா­னி­களும் கலந்­து­கொண்­டனர்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வடக்கின் நிலை­மைகள் அச்­சு­றுத்­த­லாக உள்­ள­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு மற்றும் வடக்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான பாது­காப்பு தரப்­பி­னரின் கண்­கா­ணிப்பு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
வடக்கில் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தொடர்ச்­சி­யாக பாது­காப்பு தரப்பின் கண்­கா­ணிப்போ அல்­லது அவர்­களை பின்­தொ­டரும் எந்த சம்­ப­வங்­களோ இடம்­பெ­று­வ­தில்லை. அதேபோல் தொடர்ச்­சி­யாக இந்த கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வது வெறும் வதந்தி மட்­டு­மே­யாகும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து எமது இரா­ணுவம் மிகவும் பல­மான நிலை­யிலும் அதேபோல் நாட்டில் மக்கள் மத்­தியில் மிகவும் கண்­ணி­ய­மா­கவும் தமது கட­மை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. எனினும் ஊட­கத்­தி­ன­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடையில் இருந்த நெருக்கம் மிகவும் குறை­வாக இருந்­தமை இவ்­வா­றான கருத்­து­களை ஏற்­ப­டுத்த கார­ண­மாக அமைந்­து­விட்­டது. குறிப்­பாக வடக்கில் உள்ள தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரா­ணு­வத்­தி­ன­ருடன் கொண்­டி­ருந்த தொடர்பு குறை­வா­கவே இருந்­தது.

எவ்­வாறு இருப்­பினும் வடக்கில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையோ அல்­லது ஊட­கங்­க­ளையோ கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய தேவை எப்­போதும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இருக்­க­வில்லை. ஒரு சிலரின் கருத்­து­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து தவ­றான கருத்­து­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை இல்லை. மேலும் யுத்தம் நடந்த காலத்­திலும், இறுதி யுத்தம் நடந்த காலத்­திலும் களத்தில் இருந்து போரா­டிய இரா­ணுவ வீரர்கள் இன்றும் இரா­ணு­வத்தில் உள்­ளனர். அவர்­களின் மன­நி­லைமை இன்னும் சற்று மாறு­பட்ட ஒன்­றா­கவே உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் அவர்­க­ளையும் மக்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்­டங்­களை விரைவில் சரி­செய்ய முடியும் .

மேலும் யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து நாட்டில் பிர­தான இரண்டு தேர்­தல்கள் நடை­பெற்­றுள்­ளன. இந்த இரண்டு தேர்­தலின் போதும் நிலை­மைகள் ஒரே­மா­தி­ரி­யாக இருக்­க­வில்லை. குறிப்­பாக கடந்த 2010ஆம் ஆண்டு தேர்­தலின் போது யுத்தம் நிறைவை எட்­டி­யி­ருந்த கார­ணத்­தினால் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் சற்று கடி­ன­மாகக் காணப்­பட்­டது. எனினும் கடந்த தேர்­தலின் போது நிலை­மைகள் அவ்­வாறு இருக்­க­வில்லை. கடந்த காலத்தில் நிலை­மைகள் நன்­றா­கவே மாற்றம் கண்­டுள்­ளது.

எனினும் எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும் எந்த அணி­யினர் ஆட்­சியை கைப்­பற்­றி­னாலும் நாம் எந்த அர­சாங்­கத்­தையும் சார்ந்து கட்­சி­க­ளைப்­போல செயற்­பட முடி­யாது. எமது கடமை நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்தி நாட்டை காப்­பாற்­று­வ­தே­யாகும். அதை நாம் ஒவ்­வொரு முறையும் சரி­யாக செய்து வரு­கின்றோம். மிக நீண்­ட­கால போராட்­டத்தில் பல இழப்­பு­களின் பின்னர் நாம் யுத்­தத்தை வெற்­றி­கொண்டு நாட்டை பாது­காத்­துள்ளோம். அந்த வெற்­றியை மீண்டும் தாரை­வார்த்து நாட்டை பிரச்­சி­னைக்கு உள்­ளாக்க நாம் விரும்­ப­வில்லை.

அதேபோல் யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து பெரு­ம­ளவில் பொது­மக்­களின் காணி­களை இரா­ணுவம் தக்­க­வைத்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது. குறிப்­பாக இந்த நிலங்­களில் அரச நிலங்­களும் பெரும்­பா­லான பொது­மக்­களின் நிலங்­களும் இந்த கட்­ட­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டன. அரச நிலங்­களில் பாது­காப்பு முகாம்­களை தொடர்ந்தும் வைத்­தி­ருப்­பது எந்த சிக்­க­லையும் ஏற்­ப­டுத்­தாது.

ஆனால் பொது­மக்­களின் காணி­களில் இரா­ணுவ முகாம்­களை அமைக்­கவோ அல்­லது இரா­ணு­வத்தை தங்­க­வைக்­கவோ முடி­யாது. ஆகவே யுத்­தத்தின் பின்னர் இரா­ணுவம் வசம் இருந்த பொது­மக்­களின் காணி­களை உரிய மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் பொறுப்பு எமக்கு உள்­ளது. இப்­போது வரை­யிலும் பொது­மக்ளின் காணி­களை நாம் அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்து வரு­கின்றோம். எஞ்­சி­யுள்ள காணி­க­ளையும் உரிய மக்­க­ளுக்கு ஒப்­ப­டைப்­பது எமது பொறுப்­பாகும்.

அதேபோல் இரா­ணுவ வெளி­யேற்றம் அல்­லது தேசிய பாது­காப்பு விட­யத்தில் கேள்­வியை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை மேற்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இன்று வடக்கில் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் எந்த சூழலும் இல்லை. பொதுமக்கள் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் வகையில் எமக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயற்படுகின்றனர். அதேபோல் இராணுவம் மட்டுமல்லாது கடற்படையினர், விமானப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article