Thursday, November 14, 2024

ஊடகவியலாளர்கள் உயர்வான நோக்கங்களை வைத்து இயங்க வேண்டும் – எஸ்.எம்.ஜீ.

Must read

DSC_1143ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாக இயங்குவதற்கும், தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கப்பால், வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் ஊடக சங்கங்கள் அவசியமாகும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஊடகவியலாளர் சம்மேளனம் அல்லது ஊடகவியலாளர் சங்கம் என்பது ஊடகவியலாளர்களுக்கு எப்போதும் அவசியமானதொன்றாகும். அதனுடாக எமது பிரச்சனைகளை உரியவர்களுக்கு முன்வைக்கலாம். அத்துடன் நமது ஒற்றுமையினையும் தொடர்பாடலையும் பேணமுடியும்.
ஊடகவியலாளர்கள் மிகவும் சக்திவாந்த பணியை செய்பவர்கள், இரவு பகல் பாராது சேவையாற்றுபவர்கள் இப்படிப்பட்டவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஊடகவியலாளர் சங்கம் என்பது கட்டாயம் தேவை. யாழ்ப்பாணத்தில் எஸ்.டி சிவநாயகம் ஆரம்பகாலத்தில் ஊடகவியலாளர் சங்கத்தினை உருவாக்கினார். நெருக்கடிகள் காரணமாக தொடர முடியாத நிலையொன்று ஏற்பட்டது.

ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாக இயங்குவதற்கும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கப்பால் வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்றுக்கும் ஊடக சங்கங்கள் அவசியமாகும்.

கஸ்ரமான காலமமாக இருந்தாலும். இப்போதுள்ள சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு சங்கங்களின் தேவை அவசியமானதே. அதற்கு ஒற்றுமையாகச் செயற்படுவது அவசியம். சிறிய நோக்கங்கள் இல்லாமல் உயர்வான நோக்கங்களை வைத்து இயங்க வேண்டும். கஸ்ரமான விடயம் தான்.

சிறப்பான சிந்தனையுடன் செயற்பட்டால் வெற்றி பெற முடியும். ஊடகவியலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதே முக்கியமாகும்.

இவ் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் அவர்களால் முடிந்தளவு சிறந்த முறையில் செயற்படுவதனை நான் அவதானிக்கிறேன். இந்த வகையில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

இந்த மாதாந்தக் கூட்டத்தின் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன், செயலாளர் எஸ்.வரதராஜன் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article