Wednesday, December 11, 2024

சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான

Must read


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இவ் ஆண்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான Z.A..நஸீர் அஹமட் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்எச்.முஸம்மில் வரவேற்பரையினை தொடர்ந்து ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நிகழ்வில் கலந்து கொண்ட அணைத்து திணைக்கள உத்தியோகஸ்த்தர்களையும் வரவேற்றதோடு தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டிய தேவைப்பாடுள்ளது. இக்கட்டான சூழ் நிலையில் இருந்து தனி ஒரு மனிதனாக பாரம் எடுத்து நாட்டினை கட்டியெழுப்பிய நாட்டின் ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூ கடமைப்பட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சஜீத் பிரமதாச மற்றும் அனுரகுமாரதிசநாயக்க போன்றவர்களை நாட்டினை பாராம் எடுக்கச் சொன்னனார் எவரும் எடுக்கவில்லை.நாட்டில் வங்ரோத்து நிலை காணப்பட்டதால் எவரும் முன்வரவில்லை.தனி ஒரு மனிதனாக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டினை ஒரு சுமுகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்று தமது தலைமை உரையில் தெரிவித்தார்.தொடர்ந்து கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பசுமையான தேசம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 22 இலட்சம் வீட்டுத்தோட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாகவும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்தி விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது.பல்வேறுபட்ட துறை சார்ந்த திணைக்களம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.அதிலும் குறிப்பாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல்.அதற்கு பொலிசாரின் ஒத்துழைப்பு பெறல்.பிரதேசத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைத்தல்.தடுப்பதற்கு பொலிஸ் பாதுகாப்பு அமைவிடம் அமைத்தல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.இப் பிரதேசத்தில் வாழ்வதற்கு காணி இல்லாமல் உள்ள மக்களுக்கு காணி வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.10 பேர்ச் காணி கூட பெறமுடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.இது ஒரு மனித உரிமை மீறலாகும்.நாட்டின் ஜனாதிபதி அவர்களின் கருத்தின் படி எல்லோருக்கும் காணி வழங்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளார்.கடந்த கால மக்கள் பிரதிநிதிகள் காணி ஒதுக்கீடு தொடர்பான விடயத்தில் கரிசனை காட்டவில்லை. என்றார்.கடற்றொழிலாளர்களின் மீன் பழுதடையாமல் பாதுகாப்பதற்கு பயன்படுத்தும் ஜஸ் கட்டியின் விலை அதிகரித்து காணப்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நியாயமான மீனவர்களின் கோரிக்கை என்பதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலாந்தாலோசிப்பதாகவும் தொடர்பான முழு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து கல்வி, மீன்சாரம,; குடி தன்னீர், அரிசி விநியோகம்,பொதுச் சுகாதாரம்,கால்நடை,வன வளம் வன ஜீவராசிகள்,மின்சாரம் என பல்வேற திணைக்களுடன் தொடர்பு பட்ட மக்களின் வாழ்வாதர விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இதேவேளை வாகரை பிரதேச சபையின் பிரதிநிதிக்ள தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமூகம் தராமல் உள்ளதால் பிரதேச மக்களின் சபையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு தீpர்வு பெறமுடியாத நிலமை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.எனவே குறித்த சபையின் செயலாளருக்கு ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டார். குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள்,ஏனைய திணைக்களம் சார்பாக கலந்து கொண்ட உத்தியோகஸ்த்தர்கள்,மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

க.ருத்திரன்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article