Sunday, November 24, 2024

மன்னாரில் இடம்பெற்ற விசேட தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் மன்னார்   நிருபர்

Must read


மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக காணப்படும் புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை தெளிவு படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை(23) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு நவீன தொழில்நுட்ப அனுகுமுறைகள் தொடர்பாகவும் தொழில்நுட்ப ரீதியாக தேசிய அளவில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி கற்கைக்கான வாய்ப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு விரிவுரையாளர்களாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் செயலாளர் கிறிஸ்டி சாமுவேல் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பின் உறுப்பினர் முகமட்   இர்ஷாட், மன்னார் உயர் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவபாலன் உட்பட குழுவினர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக மனிதவள உத்தியோகத்தர்கள்,தேசிய தொழிற்பயிற்சி பயிலுனர் அதிகார சபை ஊடாக கல்வி பயிலும் மாணவர்கள்,தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் தொழில்நுட்ப கற்கைகள் பயிலும் மாணவர்கள் கணினி துறை சார்ந்து செயல்படும் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த தொழில் நுட்ப தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தை தொடர்ந்து ஏனைய  மாவட்டங்களிலும் இலங்கை தகவல் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பினால் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

එස්.ආර්.ලැම්බර්ට්

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article