Sunday, November 24, 2024

கிளிநொச்சியில் நெல் பயிர்களுக்கு மடிச்சிகட்டி நோயினால் பாதிப்பு!

Must read

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற் செய்கையை கரைச்சி. கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வயல் நிலங்களில் மானாவாரி, நீர்ப்பாசனத்தின் கீழ் அடங்கலாக சுமார் 28793 கெற்றேயரில் விவசாயம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நெல்வயல்களில் மிகவும் வேகமாக நெற்பயிர்களில் மடிச்சிகட்டி எனும் நோயால் பாதிக்கப்பட்டு நெற்பயிர்களின் இதழ்களை தாக்கி நெற்பயிர்களை வைக்கோல் போன்று சென்றுவிடுகிறது இத்தாக்கத்தினால் விவசாயிகள் எந்த கிருமிநாசினிகளையும் நெற்பயிர்களுக்கு தெளித்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இவ் நோய்த்தாக்கம் தொடர்பாக மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் சூரியகுமார் ஜெகதீஸ்வரி அவர்களிடம் தொடர்புகொண்டு வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் நாங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசிகள் பாவிக்கப்பட்ட போதும் விவசாயிகளுக்கு கிருமிநாசினிகள் எந்தவொரு தாக்கமும் செலுத்தவில்லை என விவசாயிகள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள் என மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போது வந்து சென்ற காலநிலை காரணமாக இவ்வாறான நோய் தாக்கம் காரணமாக இவ் கிருமிநாசினிகளின் வீரியம் குறைவடைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

T.Paramashivam

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article