மன்னாரில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி இடம் பெற்ற பிரமாண்ட பொங்கல் விழா
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்பில் 2024 ஆம்
ஆண்டுக்கான பிரமாண்ட பொங்கல் விழா இன்று செவ்வாய்கிழமை (23) காலை ஈச்சலவாக்கை மீனாட்சி அம்மன் ஆலய வளகத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார்,மற்றும் மறவன்புலவு சச்சிதானதன், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் ஈச்சளவாக்கை பாடசாலையில் இருந்து விருந்தினர்கள் தமிழ் பாரம் பரிய மேல தாள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு 108 பானைகளில் பாரம் பரிய முறைப்படி பொங்கல் பொங்கி நிகழ்வு ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் 150 பேர் இணைந்து பாரம்பரிய நடனம் ஒன்றை அரங்கேற்றியதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள், போட்டி விளையாட்டுக்கள் என்பனவும் இடம் பெற்றது .
அதே நேரம் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது


S.R.Labert