Sunday, December 22, 2024

சிறப்பாக இடம்பெற்ற மடு வலய மட்ட கால்கோள் விழா

Must read

மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது

இதன் போது    2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்றில் கல்வி கற்க உள்ள மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட  இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயம்,கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,அந்தோனியார் புரம் தமிழ் கலவன் பாடசாலை,கூராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு, வருகை தந்த மாணவர்களின் வரவேற்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் ஆரம்பக் கல்வி உதவி கல்வி பணிப்பாளர்  செல்ரன் யூடிற், மடு வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.சி.வெலன்ரைன், மடு பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

S.R LAMBART
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article