எங்கள் மூதாதையர் தொட்டு இன்று நாங்கள் வரை வேளாண்மை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்றும் சிறுபோக விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த விவசாய காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றினால் சொளார்(ளுழடயச) செய்கைக்காக 352 ஏக்கர் விவசாய நிலத்தினை கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது ‘எங்கள் வயல் காணிகளை அபகரிக்காதேஇ விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்இ
பல ஆண்டுகள் செய்து வந்த காணிகள் எங்களுக்கே உரியதுஇ
சோளர் பவர் எமக்கு வேண்டhம்’ போன்ற வாசகங்களை எழுதிய அட்டையை ஏந்தியவாறு விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த விவசாயிகள் இது எங்கள் நிலம் எங்களுக்கு சோளார் மின்சாரம் வேண்டாம் என்றும் எங்கள் நிலத்திற்கு பதிலாக எமக்கு மாற்று நிலங்கள் தேவை இல்லை என்றும் கூறினர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜெகநாத்திடம் மகஜரும் கையளிக்கப்பட்டது .
இதன் போது கருத்து தெரிவித்த ஆணையாளர்
இவ் விடயம் தொடர்பில் தனக்கு தெரியாது என்றும் இது தொடர்பில் எந்த நிறுவனங்களும் வந்து தன்னை சந்திக்கவில்லை என்றும்இ ஆராய்ந்து பார்த்து எங்களுடைய பதிவுக்குட்பட்ட எத்தனை விவசாயிகளுக்கு காணி உள்ளது என்பதை எங்களுடைய ஆணையாளர் நாயகத்துக்கு தகவலை தெரியப்படுத்துவதாக தெரிவித்தார்.
ஆணையாளரின் கருத்தினை கேட்ட விவசாயிகள் அவ் விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.க.ருத்திரன்
K.Rudran