மன்னார் கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் மிசறியோ நிதியுதவியுடன் முசலி வேப்பங்குளம் பாடசாலையில் தரம் 9, 10, 11, 12 வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தனிநபர் சுகாதார மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கானது சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் இன்று (21) இடம்பெற்றது.
பெண்களுக்கான கருத்தமர்வானது முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொது சுகாதார மருத்துவ மாது திருமதி.எஸ்.பெனடிற்ரா தலைமையிலும் ,ஆண்களுக்கான கருத்தமர்வானது அதே அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களான .எ.கே.ஜவாஹிர் மற்றும் .டிலக்சன் குரூஸ் ஆகியோரினாலும் நடாத்தப்பட்டது.
இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் 30 மாணவர்களும் 30 மாணவிகளும் கலந்து பயன் பெற்றுக்கொண்டனர்.
S.R.Lambert